'இப்படி பங்கமா மாட்டிக்கிட்டாங்களே'... 'வச்சு செஞ்ச நெட்டிசன்கள்'... வைரலாகும் புகைப்படம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காவல்துறையினர் ஒரு போலீஸ்காரர் மற்றும் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு போட்டோஷாப் மூலமாக முகக்கவசம் வரைந்து பதிவிட்ட சம்பவத்தை நெட்டிசன்கள் பங்கமாகக் கலாய்த்து வருகிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் கைது செய்யப்பட்ட ஒரு நபருடன் முகக்கவசம் இல்லாமல் ஒரு போலீஸ்காரர் போஸ் கொடுத்ததை அடுத்து, உத்தரப்பிரதேச காவல்துறையினர் தாங்களாகவே ஒரு முகக்கவசத்தை போட்டோஷாப் மூலமாக வரைந்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். ஆனால் அது பார்ப்பதற்கே போட்டோ ஷாப் போல இருப்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து விட்டார்கள்.
அதிலும் குறிப்பாகப் பார்ப்பதற்கே மிகவும் நுட்பமான இல்லாததால் ஒருவர் இந்த படத்தைக் கொஞ்சம் பெரிதாக்கிப் பார்த்தாலே இந்த போட்டோஷாப் வேலை தெளிவாகத் தெரிகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த பதிவை வைத்துக் கிண்டலடித்துப் பல மீம்ஸ்களை உருவாக்கி, கலாய்த்து வருகின்றனர். இதையடுத்து இந்த புகைப்படத்தை அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கத்திலிருந்து உத்திர பிரதேச காவல்துறை நீக்கியது.
இருப்பினும் நூற்றுக்கணக்கான முறை பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட்களால் அது இன்னும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த குறிப்பிட்ட பதிவைப் பற்றி சிலர் நகைச்சுவையாகப் பேசும்போது, மற்ற பதிவுகளையும் ஆராய்ச்சி செய்யத் தொடங்கியுள்ளனர். ஆனால் இது முதல் முறை அல்ல. கடந்த மே 2020 இல் ஒரு பதிவில், உத்தரப்பிரதேச பரேலி காவல்துறை, மக்களின் வாயை மறைக்க ஒரு நீல பேனா போட்டோஷாப்பை பயன்படுத்தியது, இதனைக் கலாய்த்து அப்போதே நெட்டிசன்கள் வறுத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.