'பைப்புக்குள் பக்காவா பேக்கிங்'... 'பாக்க பால் பவுடர் போல இருக்கும்'... 'ஒர்த் மட்டும் 1000 கோடி ரூபாய்'... கொரோனா நேரத்தில் மிரள வைத்த கும்பல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகம் முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொருளாதாரம் அடியோடு முடங்கியுள்ளது. இளைஞர்கள் பலரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழல் இருப்பதால், சிலர் தவறான பாதையில் செல்லும் நிகழ்வுகளும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் சிலர் போதை பழக்கத்திற்கு அடிமையாவது தான் வேதனையின் உச்சம். இது ஒருபுறமிருக்க இந்தியாவுக்குள் வெளிநாட்டிலிருந்து போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக, நவிமும்பையில் உள்ள வருவாய் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் மராட்டியத்தின் கொங்கன் பிரிவுக்கு உட்பட்ட நவிமும்பையில் உள்ள நவசேவா துறைமுகத்தில் வருவாய் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்க அதிகாரிகள் உஷாராகிச் சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது யாருக்கும் சந்தேகம் வராத வகையில் பைப்புகளின் உள்ளே பக்காவா பேக் செய்யப்பட்டு 191 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. பார்ப்பதற்குப் பால் பவுடர் போல இருக்கும் இதன் விலை தான் தலையைச் சுற்ற வைத்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 1000 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 1000 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரைக் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
191 kg of drugs, worth Rs 1000 crores, seized at Nhava Sheva port of Navi Mumbai in a joint operation with customs. Transported inside pipes, drugs were brought through Afghanistan. Court has sent the two accused to 14 days police custody: Directorate of Revenue Intelligence pic.twitter.com/YZw10V7kuw
— ANI (@ANI) August 10, 2020