அடுத்த அதிர்ச்சி!! பிரபல டிவி நடிகர் அறையில் 'மர்ம' மரணம்!.. கதிகலங்கிய திரைத்துறை!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையை சேர்ந்த டிவி நடிகர் சமீர் ஷர்மா தனது அறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மும்பையில் பிரபல டிவி நடிகராக இருந்தவர் சமீர் ஷர்மா (44). பல்வேறு டிவி தொடர்களில் நடித்த வந்த இவர், நேற்று தனது அறையில் மர்மமான முறையில் இறந்துள்ளார். மலாத் பகுதியில் இருந்த அவரது அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் உயிரிழந்த அறையில் எந்தவித தற்கொலை கடிதமும் இல்லை. இதுதொடர்பாக மலாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அத்துடன் சமீர் ஷர்மாவின் உடலை கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். மேலும், எதிர்பாராத மரணம் என வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்த சமீர் ஷர்மா கடந்த 2017ஆம் ஆண்டு உடல்நிலை பாதிப்பில் சிக்கியிருந்தார். சுமார் ஒரு வருடம் அவர் சிகிச்சை எடுத்திருந்தார். அதன் பின்னர் மீண்டும் டிவி தொடர்களில் நடித்து வந்தார். ஆனாலும் அவர் கடும் மன நெருக்கடியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவிற்கு மும்பை திரைத்துறையினர் மற்றும் டிவி நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
