'இந்த நாட்டில் மட்டும்'... '1 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு?'... 'அதிர்ச்சி கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்'...
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் சுமார் 1 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலவரப்படி, அதிகாரப்பூர்வமாக சுமார் 36,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,200 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் வறுமை மற்றும் அங்குள்ள உள்நாட்டு பிரச்சனைகள் காரணமாக அங்கு பாதிப்புகள் பெருமளவில் குறைவாக பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட மாதிரி கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் அல்லது சுமார் 1 கோடி பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். பெரும்பாலான பாதிப்புகள் நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தலைநகர் காபூல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல பாதிப்புகள் அறிகுறியற்றவை என நம்பப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் நாடு முழுவதிலுமிருந்து 9,500 பேர் மீது நடத்தப்பட்ட ஆன்டிபாடி பரிசோதனையின் மூலம் இந்த முடிவுகள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
