சுஷாந்த் கடைசியா GOOGLE-ல 'இதைத்தான்' தேடுனாரு... ஷாக் கொடுத்த கமிஷனர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜூன் 14-ம் தேதி சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார். எனினும் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் இது திட்டமிட்ட கொலை என்றும் தொடர்ந்து பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவரது ரசிகர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுஷாந்த் இறப்பதற்கு முன் கூகுளில் வழியில்லாத மரணம் மற்றும் பைபோலார் டிஸ்ஆர்டர்(bipolar disorder), Schizophrenia(ஒருவகை மனக்கோளாறு) ஆகியவை குறித்து தேடி பார்த்து இருப்பதாக மும்பை போலீஸ் கமிஷனர் தெரிவித்து இருக்கிறார். மேலும் கூகுளில் தன்னைப்பற்றிய செய்திகளையும் அவர் தேடிப்பார்த்ததாக கூறப்படுகிறது.
அதோடு சுஷாந்தின் முன்னாள் மேனேஜர் திஷா சலியன் சுஷாந்த் இறப்பதற்கு 5 நாட்கள் முன் இறந்தார். அந்த வழக்கு தொடர்பாக தன்னுடைய பெயரும் அடிபட்டதால் சுஷாந்த் அப்செட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுஷாந்த் தற்கொலை வழக்கு மீண்டும் இந்தியளவில் கவனம் பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்
