'மனைவி'யின் மூக்கை அறுத்த 'கணவன்'... ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த 'மனைவி'... 'இதுக்காக எல்லாமா இப்படி பண்ணுவாங்க'? - உச்சகட்ட 'கொடூரம்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தான் நாட்டைப் பொறுத்தவரை பெண்களுக்கு எதிரான வன்முறை மிகவும் அதிகமாக நடைபெறுவது என்பது மிகவும் கொடூரமான விஷயமாகும்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் பகுதியில் இருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் சார்கா. இவருக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், ஆறு வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், சார்காவின் கணவர் அவரை தினமும் அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஒரு நாள் சந்தேகத்தின் பெயரில் சார்காவின் கணவர், அவரது மூக்கை அறுத்து விட்டார். முன்னதாக, கத்தியை எடுத்துக் கொண்டு தன்னை நெருங்கிய போது அவர் இப்படி ஒரு கொடூர சம்பவத்தை தன்னிடம் மேற்கொள்வார் என சார்கா எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து அவரை அங்கேயே விட்டு விட்டு கணவர் சென்றுள்ளார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ள நிலையில், பல தினங்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் அவரது மூக்கு மீண்டும் கிடைக்க மருத்துவர் ஒருவர் உதவி செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சார்கா கூறுகையில், 'நான் என் கணவரிடம் கூறாமல் என் தாய் வீட்டிற்கு சென்றதால், அது அவருக்கு அவமானமாக ஆகி விட்டது. அதனால் என்னை ஒரு தோட்டத்திற்கு அழைத்து சென்ற என் கணவர் ஏன் என்னிடம் சொல்லாமல் சென்றாய் என கேட்டு அடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து என் மூக்கை அறுத்த நிலையில் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. ஆனாலும், என்னை அவர் அங்கேயே விட்டு சென்றார்' என தெரிவித்துள்ளார்.
சார்காவிற்கு தற்போது தீவிர சிகிச்சைக்கு பின், பழையது போல தனது மூக்கு இருப்பதை எண்ணி அந்த மருத்துவருக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். இது போன்று, கணவர்களால் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் பல பெண்களுக்கு அறுவை சிகிச்சைகளை அந்த மருத்துவர் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
