எனக்கு 'என்டே' கிடையாது...! 'ஒரே மாசத்துல நாலு கல்யாணம்...' 'மூணு டைவர்ஸ்...' 'இது எப்படிங்க சாத்தியம்...? - விசித்திர நிகழ்வு...!
முகப்பு > செய்திகள் > உலகம்வங்கி அலுவலர் ஒருவர் ஒரே மாதத்தில் 4 முறை திருமணம் செய்தும் 3 முறை விவாகரத்தும் செய்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது.
![Taiwan bank officer got married 4 times divorced 3 times. Taiwan bank officer got married 4 times divorced 3 times.](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/taiwan-bank-officer-got-married-4-times-divorced-3-times.jpg)
தைவான் நாட்டில் வங்கி ஒன்றில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய திருமணத்திற்காக கடந்தாண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 8 நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளார்.
அதன்பின் திருமணமாகி அந்த விடுப்பு முடிவதற்கு முன்பே அந்த பெண்ணை விவாகரத்து செய்துள்ளார். இதனையடுத்து மீண்டும் அந்தப் பெண்ணையே திருமணம் செய்துக்கொள்ள வங்கியில் விடுப்புக்காக விண்ணப்பித்தார்.
இதுவரை அந்த ஒரு பெண்ணையே 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்தது மூலம் அவருக்கு 32 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடைத்துள்ளது.
விடுமுறைக்காக இவர் விவாகரத்து செய்கிறாரா? என்ற சந்தேகம் வங்கி நிர்வாகத்திற்கே ஏற்பட்டுள்ளது. அதன்பின் இந்த விவகாரத்தின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்த வங்கி நிர்வாகம், அந்த நபருக்கு ஏற்கெனவே ஊதியத்துடன் கொடுக்கப்பட்ட விடுமுறையை ரத்து செய்துள்ளது.
இதனால் கடுப்பான அந்த வங்கி ஊழியர் இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வினோத நிகழ்வு வைரலாகி, தங்கள் நாட்டு தொழிலாளர் சட்டத்தில் இத்தகைய ஓட்டை இருக்கிறதா என தைவான் மக்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)