சென்னை பிட்ச்ச சென்னை வாசிகளவிட... கோலி நல்லா தெரிஞ்சுவச்சிருக்காரு!.. பிட்ச்சை வைத்து மேட்ச்சை மாற்றிய கோலியின் ராஜதந்திரம்!.. ஆர்சிபி ஜெயிச்சது 'இப்படி' தான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று பரபரப்பாக சென்ற போட்டியில் பெங்களூர் அணி வெற்றிபெற கோலி எடுத்த முக்கியமான முடிவு ஒன்றுதான் காரணமாக இருந்தது.
![ipl rcb kohli winning strategy chennai pitch condition srh ipl rcb kohli winning strategy chennai pitch condition srh](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/ipl-rcb-kohli-winning-strategy-chennai-pitch-condition-srh.jpg)
ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் திரில் வெற்றிபெற்றுள்ளது. நேற்று பெங்களூருக்கும் ஹைதராபாத்திற்கும் இடையிலான போட்டி சென்னையில் விறுவிறுப்பாக நடந்தது.
நேற்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 20 ஓவருக்கு 8 விக்கெட்டை இழந்து 149 எடுத்தது. இதையடுத்து பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து வெறும் 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வெற்றிபெற்றுள்ளது.
இந்த போட்டியில் 16வது ஓவர் வரை பெங்களூர் அணி தோல்வி அடையும், ஹைதரபாத் கண்டிப்பாக வெற்றிபெறும் என்ற சூழ்நிலைதான் இருந்தது. கடைசி 24 பந்தில் 35 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைதான் இருந்தது. பெங்களூர் மீண்டு வருவதற்கான வாய்ப்பு சுத்தமாக இல்லை.
ஆனால் சபாஷ் அஹமது வீசிய 17வது ஓவரில் மொத்தமாக ஆட்டம் மாறியது. அந்த ஓவரில் அடுத்தடுத்து பிரைஸ்டோ, மணீஷ் பாண்டே அவுட் ஆனார்கள். பின் அதே ஓவர் சமத் அவுட் ஆனார். ஹைதராபாத் அணியின் ஹிட்டர்கள் மூன்று பேரும் ஒரே ஓவரில் அவுட் ஆனார்கள். இந்த ஒரு ஓவர்தான் மொத்தமாக போட்டியை மாற்றியது.
இதற்கு கோலியின் கேப்டன்சிதான் காரணம். முதல் 10 ஓவர்களில் சபாஷ், ஹர்ஷல் இருவரையும் கோலி சரியாக பயன்படுத்தவில்லை. இதை பலரும் விமர்சனம் செய்தனர். ஏன் இவர்களுக்கு ஓவர் கொடுக்கவில்லை, ஏன் ஓவர் ரொட்டேட் செய்யவில்லை என்று விமர்சனம் செய்தனர். ஆனால், கோலி பிட்ச் மாற வேண்டும் என்று காத்து இருந்தார்.
நேற்று மேட்ச் போக போக பிட்ச் நன்றாக டர்ன் ஆனது. இதனால் கடைசி கட்டத்தில் சபாஷ் அகமதுக்கு ஓவர் கொடுத்தார். அந்த ஓவரில்தான் மொத்தமாக ஆட்டம் மாறியது. பவுலர்களை ரிசர்வ் செய்து வைத்து, அவர்களுக்கு கடைசியில் வாய்ப்பு கொடுத்து ஆட்டத்தை மாற்றினார். முன்னதாக கொல்கத்தாவிற்கு எதிராக மும்பை இதேபோல் வென்றது.
அப்போது ரோஹித் அட்டாக்கிங் பீல்டிங் வைத்து இருந்தார். ஆனால், இங்கு கோலியோ, பந்தை பீட்டில் போட சொல்லி, பேட்ஸ்மேன்களை அடிக்க விட்டு விக்கெட் எடுத்தார். கடைசி 4 ஓவர்களில் நேற்று ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்தது.
அதற்கு காரணம், கடைசி 4 ஓவர்களை பெஸ்ட் பவுலர்களை வைத்து கோலி வீச வைத்தார். சென்னை பிட்ச்சில் கடைசியில் ஆடுவது கஷ்டம் என்பதால் கோலி இப்படி செய்தார். இதுதான் பெங்களூர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. கோலியின் கேப்டன்சி நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக மிகவும் சிறப்பாக இருந்தது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)