"எங்களோட 10 வருஷ 'கல்யாண' வாழ்க்க இதோட முடிஞ்சுது..." 'அரசியலால்' வந்த 'விரிசல்'... 'அதிர்ச்சி' முடிவெடுத்த 'பாஜக' எம்.பி!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தற்போதே அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜவுக்கும் இடையே தான் அதிக போட்டி நிலவுகிறது. சமீபத்தில் கூட திரிணாமூல் கட்சியிலுள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் சிலர் பாஜக கட்சிக்கு மாறினர். இதன் காரணமாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில், தனது மனைவி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால் கோபமடைந்த பாஜக எம்.பி ஒருவர், தனது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக கூறியுள்ளார். பாஜக எம்.பி சவுமித்ரா கான் என்பவரின் மனைவி சுஜாதா மோண்டல் கான், இன்று காலை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மனைவி வேறு கட்சியில் இணைந்ததால் கடும் அதிருப்தியடைந்த சவுமித்ரா கான், தங்களது திருமண பந்தத்தை அரசியல் முடித்து விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது, பிஸ்னாபூர் தொகுதிக்குள் நுழைய சவுமித்ரா கானுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்த போது, தனியாளாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு தனது கணவருக்கு வெற்றியை தேடித் தந்தவர் சுஜாதா. கணவரின் வெற்றிக்கு பாடு பட்ட போதிலும் அதற்கான பயன் எதுவும் தனக்கு கிடைக்கவில்லை என சுஜாதா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சவுமித்ரா கான், 'அரசியலால் எங்களின் 10 ஆண்டு கால திருமணம் பந்தம் முறிந்து விட்டது. பாஜகவிற்காக நான் கடுமையாக உழைப்பேன். நான் ஒருபோதும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதில்லை' என தெரிவித்துள்ளார்.
பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சுஜாதா கான், 'அரசியல் வேறு, குடும்பம் வேறு. என் கணவர் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாரோ, அதை அவர் செய்யட்டும். ஆனால் ஒரு நாள் கண்டிப்பாக உணர்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு கூட வரலாம்' என தெரிவித்துள்ளார்.