சுஷாந்த் சிங் வழக்கில் 'பகீர்' திருப்பம்!.. 'என்னோட மகன கொஞ்சம் கொஞ்சமா'... நொறுங்கிப்போன தந்தை... பரபரப்பு வாக்குமூலம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிஷம் வைத்து எனது மகனை கொன்றது ரியா சக்ரபோர்த்திதான், அவரை கைது செய்ய வேண்டும் என சுஷாந்த் சிங் தந்தை கூறி உள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் ரியா சக்ரவர்த்திக்கு எதிராக அவரது மொபைலில் இருந்து பெறப்பட்ட வாட்ஸ்அப் தகவல்கள் அடிப்படையில் போதைப்பொருள் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய குற்றச்சாட்டுகள் வெளிவந்தவுடன், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை, "ரியா சக்ரபோர்த்தி தனது மகனை விஷம் வைத்து கொலை செய்து உள்ளார்" என்று குற்றம் சாட்டி, அவரை கைது செய்யக் கோரிக்கை வைத்து உள்ளார்.
பண மோசடி விசாரணைக்காக கைப்பற்றப்பட்ட ரியா சக்ரபோர்த்தியின் மொபைலில் காணப்பட்ட வாட்ஸ்அப் தகவல்களின் பதினைந்து பக்கங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்த ஒரு குழு மும்பைக்கு சென்று உள்ளது.
ரியா சக்போர்த்தி மற்றும் ஒரு சிலருக்கு எதிராக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் "குற்ற எண் 15" பதிவு செய்துள்ளது. 'போதைப்பொருள் வைத்திருத்தல், வாங்குதல் மற்றும் பயன்படுத்துதல் மற்றும் ஒரு குற்றத்தைச் செய்வதற்கான தூண்டுதல் மற்றும் குற்றச் சதி' தொடர்பான சட்டத்தின் கீழ் போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், "ரியா சக்ரபோர்த்தி நீண்ட காலமாக எனது மகன் சுஷாந்திற்கு விஷம் கொடுத்து வந்து உள்ளார். அவர்தான் கொலையாளி. அவரும் அவருடைய கூட்டாளிகளும் தாமதமின்றி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்" என்று சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ரியா சக்ரவர்த்தியின் வழக்கறிஞர், "தனது வாழ்க்கையில் ஒருபோதும் போதைப்பொருளை உட்கொள்ளவில்லை" என்று அவர் கூறி உள்ளார். அவர் எப்போதும் இரத்த பரிசோதனைக்கு தயாராக இருக்கிறார் என கூறினார்.

மற்ற செய்திகள்
