“உச்ச பட்ச ‘கோபத்தில்’ சித்தப்பா வீட்டுக்கு போனவர்கள்!’ ... சிறிது நேரத்திலேயே போலீசில் சரண்!” - கொலையாளிகள் ‘கையில்’ இருந்ததை பார்த்து ‘உறைந்து’ நின்ற போலீசார்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள புதுவயல் தைக்கால் பகுதியில் கறிக்கடை நடத்தி வந்த யூசுப் ரகுமானுக்கும் (வயது 45) அவரது அண்ணன் சகுபர் அலிக்கும் இடையே நீண்ட காலமாக பூர்வீக சொத்து தகராறு அவ்வப்போது ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் சகுபர் அலியின் மகன்கள் ரியாஸ் கான் (36), ரகுமான் கான் (31) இருவரும் சொத்து தொடர்பாக தனது சித்தப்பா யூசுப் ரகுமானை நேற்று இரவு சந்தித்து பேசும்போது, அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த ரியாஸ் கான் மற்றும் அவரது தம்பி ரகுமான்கான் இருவரும் தங்களது சித்தப்பா யூசுப் ரகுமானின் தலையை துண்டித்தனர்.
மேலும் அந்த துண்டித்த தலையுடன் சாக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு சரணடைய சென்றதும், அங்கிருந்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட யூசுப்பின் உடலையும், தலையையும் கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

மற்ற செய்திகள்
