கொஞ்சம் 'பேக்ல' போய் 'யோசிச்சு' பாருங்க 'மோடிஜி'... 'தோற்றுப்போன' திட்டத்துக்கு '40 ஆயிரம் கோடி' ஒதுக்கிருக்கீங்க... 'டிவிட்டர் பதிவில் விமர்சித்த ராகுல்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | May 19, 2020 07:47 AM

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு கூடுதலாக 40,000 கோடி ஒதுக்கிய பிரதமர் மோடியின் நடவடிக்கையை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

Modi allocates funds to Congress project-Rahul posted on Twitter

கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி முதல்முறை பதவியேற்ற பின்னர் உரையாற்றினார்., மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தோற்றுப்போன காங்கிரஸ் அரசின் நினைவுச் சின்னம் என்று அப்போது குறிப்பிட்டு பேசினார்.

இந்நிலையில், கடந்த வாரம் கொரோனா பாதிப்பினால் நலிவடைந்த பொருளாதாரத்தை புதுப்பிக்க, அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு நிதி அறிவிப்பில் இத்திட்டத்துக்காக கூடுதலாக 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று அவரது டிவிட்டர் பதிவில் விமர்சனம் செய்துள்ளார். அதில் ``ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு பிரதமர் கூடுதலாக 40,000 கோடி நிதி ஒதுக்கி உள்ளார். இத்திட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு அதனை ஊக்குவிப்பதற்கு அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்’’ என்று கூறி மோடிஸ் யூடர்ன் ஆன் எம்என்ஆர்இஜிஏ என்ற ஹேஷ்டேக்கில் 2014ல் இத்திட்டம் குறித்து மோடி பேசிய வீடியோவை இணைத்து பதிவிட்டுள்ளார்.