'வீட்டுக்கு' செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு... 'ஆணுறை' வழங்கும் மாநிலம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலிலுள்ள நிலையில், ஊரடங்கின் காரணமாக வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.
அதே சமயம் போக்குவரத்தும் இல்லாத காரணத்தால் தங்களது சொந்த ஊர்களுக்கு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே சென்றனர். இதனையடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர் சென்றடைய சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டது. அப்படி சொந்த ஊர் சென்றடையும் தொழிலாளர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் சொந்த வீட்டுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு பீகார் மாநில சுகாதாரத்துறை ஆணுறையை வழங்கி அனுப்பியுள்ளது. திட்டமிடப்படாத தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், மக்களின் தொகையை கட்டுப்படுத்துவதும் சுகாதாரத்துறையின் நோக்கம் தான் என இதுகுறித்து பீகார் மாநில சுகாதாரத்துறை கருத்து தெரிவித்துள்ளது. முன்னதாக தொழிலாளர்களிடம் இதுகுறித்து அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.