என்னய்யா சொல்றீங்க.. வெள்ளை கலர்ல மாங்காவா..? குழம்பி போன நெட்டிசன்கள்.. உண்மையில அது என்ன தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > இந்தியாவெள்ளை நிறத்தில் மாங்காய் இருப்பது போன்ற போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிட்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்தி பாபு. இவர் தனது கடைக்கு விற்பனைக்காக அருகில் உள்ள கோழிப் பண்ணையில் இருந்து முட்டைகளை வாங்கி வந்துள்ளார்.
அதில் ஒரு முட்டை மட்டும் மாங்காய் வடிவில் இருந்துள்ளது. இதைப் பார்த்து சக்தி பாபு ஆச்சரியம் அடைந்தார். உடனே இதனை போட்டோ எடுத்து இணையத்தில் வெளியிடவும் அது வைரலாகியுள்ளது.
ஒரு மாங்காய்க்கு அருகில் இந்த முட்டையை வைத்து போட்டோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அச்சு அசலாக அந்த மாங்காய் போலவே இந்த முட்டை இருந்துள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், என்னது வெள்ளை கலர்ல மாங்காவா என குழம்பி போயுள்ளனர். ஆனால் கடைசியில் அது முட்டை என உண்மை தெரிந்ததும் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்த விஷயம் அப்பகுதியில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.

மற்ற செய்திகள்
