3 கோடி மதிப்புள்ள காரில் 'டெலிவரி' செய்யப்படும் 'மாம்பழம்'... அப்படி என்ன ஸ்பெஷல்?
முகப்பு > செய்திகள் > உலகம்நாளொன்றுக்கு 8 டெலிவரிகள் இந்த காரில் செய்யப்படுவதாக தெரிவித்து உள்ளனர்.

துபாயில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்று மாம்பழங்களை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி காரில் சென்று டெலிவரி செய்கிறது. அத்துடன் அந்த வாடிக்கையாளரையும் காரில் ஒரு ரவுண்டு அழைத்து சென்றும் அசத்துகின்றனர்.
இதுகுறித்து சூப்பர் மார்க்கெட்டின் இயக்குநர் மொஹம்மது ஜெஹான்செப் கூறுகையில், '' பழங்களின் அரசன் மாம்பழம் என்பதால் அரசனை போலவே எடுத்துச்சென்று டெலிவரி செய்கிறோம்,'' என தெரிவித்து இருக்கிறார். இந்திய மதிப்பில் 2000 ரூபாய்க்கு மாம்பழங்கள் ஆர்டர் செய்பவர்களுக்கு லம்போர்கினியில் மாம்பழம் வந்து சேரும்.
ஒரு டெலிவரியை செய்து முடிக்கவே 1 மணி நேரத்துக்கு மேல் ஆவதால் நாளொன்றுக்கு 8 டெலிவரிகள் மட்டுமே செய்ய முடிவெடுத்து இருப்பதாக அந்த சூப்பர் மார்க்கெட் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
