‘இளைஞரை அடித்தே கொலை செய்த கொடூரம்..’ அதிரவைக்கும் காரணம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Jun 26, 2019 10:52 AM
மயிலாடுதுறையில் மாங்காய் திருடியது தொடர்பான பிரச்சனையில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையைச் சேர்ந்த கார்த்தி என்பவர் கொத்தனார் வேலை செய்துவந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த குணசீலன், மணிவாசகம் ஆகியோர் தங்களை மாங்காய் திருடியதாகக் கூறி மாட்டிவிட்டதாக கார்த்தியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தகராறில் இருவரால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த கார்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தலைமறைவாகியுள்ள குணசீலன், மணிவாசகத்தைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில் சாராயம் விற்று வந்த சிரஞ்சீவி என்பவரை எதிர்த்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, சிரஞ்சீவி தூண்டிவிட்டே கார்த்தி கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
