அட என்னங்கடா நடக்குது...? '2K' கிட்ஸ் வேதனை... 'அவன்தான்' இதுக்கு காரணம்...அடித்துக் கூறும் சிறுமி...!
முகப்பு > செய்திகள் > உலகம்10 வயது சிறுவன் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக செய்தி வெளியான நிலையில், மருத்துவ பரிசோதனையில் சிறுவன், இனப்பெருக்கம் செய்யும் அளவுக்கு முதிர்ச்சியைப் பெறவில்லை என்று தெரியவந்தது.

ரஷ்யாவின் Zheleznogorsk என்ற இடத்தைச் சேர்ந்த டார்யா என்ற 13 வயது சிறுமி கர்ப்பமானது அவரின் வீட்டுக்கு தெரியவர, சிறுமியின் காதலனான 10 வயது இவான் இதற்க்கு காரணம் என்று கூறியுள்ளார். தாங்கள் இருவரும் உடலுறவு கொண்டதாகவும் அதன் மூலம் கர்ப்பமானதாகவும் சிறுமி கூற, இந்த செய்தி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
எனினும், சிறுவன் மற்றும் சிறுமி இருவரும் டிவி நிகழ்ச்சி வரை பங்கேற்று, கர்ப்பமானது பற்றி பேசி வந்த நிலையில், இருவரின் பெற்றோரின் சம்மதத்தின் பேரில் இளம் ஜோடி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சிறுவனை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர் கூறிய தகவல், இந்த விவகாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
பாலின சிறப்பு மருத்துவர் ஒருவர், இவான் குழந்தையின் தந்தையாக இருக்க வாய்ப்பில்லை என்றும், இனப்பெருக்கம் செய்யும் அளவு அவனது உடல் முதிர்ச்சி பெறவில்லை என்றும் கூறினார். அதே நேரத்தில் சிறுமியோ, தனக்கு வேறு யாருடனும் தொடர்பில்லை என்று கூற, அதே நேரத்தில், அவரை பரிசோதித்த மனநல நிபுணர் ஒருவரும், அவள் பொய் சொல்ல வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஜோடியின் பெற்றோர், கர்ப்பமாக இருகும் சிறுமிக்கு தாங்கள் ஆதரவாக இருக்கப்போவதாகவும், குழந்தையை தாங்களே வளர்க்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். சிறுமியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது பற்றி குழப்பம் இருப்பதால், குழந்தை பிறந்த பின்னர் டி.என்.ஏ சோதனை வரை செய்ய வாய்ப்பு இருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த செய்தி இணையதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் 2K கிட்ஸ் என தங்களை முன்னிறுத்துபவர்கள் இந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்துள்ளனர்.
