யாரை கேட்டு பப்பாளி செடிக்கு நீ வேலி போட்ட? சோகத்தில் முடிந்த குடும்ப தகராறு..
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார் மாநிலத்தில் பப்பாளி செடிக்கு வேலி அமைப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் மரணம் அடைந்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பப்பாளி செடி
பீகார் மாநிலத்தின் தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விபா தேவி. இவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது வீட்டிற்கு அருகே பப்பாளி செடி ஒன்றை தனது மகள் பிரியங்கா குமாரியுடன் இணைந்து வைத்திருக்கிறார். இதனை அடுத்து விலங்குகளிடம் இருந்து அந்த செடியை காப்பாற்றும் நோக்கில் அதை சுற்றி செங்கற்களால் வேலி ஒன்றை அமைத்திருக்கிறார் விபா தேவி.
இந்நிலையில் நேற்று விபா தேவியின் உறவினரும் அண்டை வீட்டாருமான ரவி குமார் மற்றும் அவரது தாயார் ஆகியோர் வேலி அமைக்கப்பட்டது குறித்து தேவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றவே, கோபமடைந்த ரவி குமார் விபா தேவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி
பப்பாளி செடிக்கு உரிய அனுமதி பெறாமல் வேலி அமைத்ததாக ரவிக் குமார் விபா தேவியை தாக்கியதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த ஷுபன்கார்பூர் பகுதி காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்த விசாரணையில் இறங்கினர். ஆனால், ரவி குமாரின் தாக்குதலினால் பலத்த காயமடைந்த விபா தேவி சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் அவரது உடல் பிணக்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வழக்கு பதிவு
இந்நிலையில் விபா தேவியின் மகள் பிரியங்கா குமாரி காவல்துறைக்கு அளித்த புகாரில்," கடந்த சனிக்கிழமை மதியம் எங்களுடைய வீட்டில் வைக்கப்பட்ட பப்பாளி செடிக்கு வேலி அமைத்தார் எனது தாயார். அப்போது ரவி குமாரின் தாய் அங்கே வந்து வேலி அமைக்கக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனிடையே அங்கு வந்த ரவி எனது தாயாரை தாக்கினார். அதன் காரணமாக அவர் அங்கேயே மயக்கமடைந்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ரவி குமார் மீது FIR பதியப்பட்டுள்ளதாகவும் தலைமறைவாகி உள்ள ரவி குமாரை பிடிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பீஹார் மாநிலத்தில், பப்பாளி செடிக்கு வேலி அமைப்பதில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8