Kadaisi Vivasayi Others

பசி எவ்வளவு கொடுமைன்னு எனக்குத் தெரியும்.. அதுனால தான்.. 10 ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு இலவச உணவளிக்கும் ஹோட்டல் உரிமையாளர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Feb 09, 2022 11:13 AM

பசி.. உலகின் பெரும்பாலான குற்றங்களுக்கு ஆதாரப் புள்ளியாக அமைந்துவிடுகிறது. கொரோனா, வேலைவாய்ப்பு இல்லாத சூழல், வறுமை என சமீப காலங்களில் பசி தன்னுடைய கோர கைகளால் மனிதத்தை இறுக்கி மூச்சுத்திணற வைக்கிறது. ஆனாலும் நல்ல எண்ணம் கொண்ட பலர் பசிக்கு எதிராக களம்கண்டு மனிதத்தை மலரச் செய்துவருகின்றனர்.

Karnataka Man provide free food for poor peoples last 10 Years

ஆமை ஓடு மாதிரி தோல்..நாட்டிலேயே முதல் முறை.. பிறந்த குழந்தையை பார்த்து திகைத்த டாக்டர்கள்..!

அவர்களுள் ஒருவர்தான் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நசீர் அகமது. கடந்த பத்து ஆண்டுகளாக ஆதரவற்றோர், ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், வயதானோர், புலம்பெயர்ந்தோர் எனப் பலருக்கும் இலவசமாக உணவு அளித்து வருகிறார்.

4 கிலோ

உடுப்பி-யில் ஹோட்டல் ஒன்றினை நடத்திவரும் நசீர் அகமது, தினமும் தனது ஹோட்டலில் மதியம் மற்றும் இரவு கூடுதலாக 4 கிலோ சாதத்தினை செய்து, அவற்றை ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறார். சாதி, மத பேதங்களைக் கடந்து பசித்த வயிறுக்கு உணவு சென்று சேர்ந்திட வேண்டும் என்பதில் நசீர் அகமது தெளிவாக இருக்கிறார்.

பசின்னா என்னனு எனக்குத் தெரியும்

இலவசமாக உணவு அளிக்கும் நோக்கம் பற்றி நசீர் அகமதுவிடம் கேட்டபோது," என்னுடைய குடும்பத்தில் நாங்கள் சகோதர, சகோதரிகள் மொத்தம் 11 பேர். சிறுவயதில் பசிக் கொடுமையை நாங்கள் அனுபவித்திருக்கிறோம். அந்த வலி எனக்குத் தெரியும். அதனாலேயே இந்த திட்டத்தில் இறங்கினேன். இந்த 10 ஆண்டுகளில் ஒருமுறை கூட ஏழை மக்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்தவில்லை" என உருக்கத்துடன் குறிப்பிட்டார்.

Karnataka Man provide free food for poor peoples last 10 Years

கடவுள்

நசீர் அகமதுவின் இந்த கருணைத் திட்டத்தின் மூலம் பல மக்கள் பலனடைந்து வருகின்றனர். இவரை முன்னுதாரணமாகக்கொண்டு எளிய மக்களுக்கு உணவு அளிக்கும் முயற்சியில் தற்போது பலரும் ஈடுபட்டு வருகிறார்கள். பத்து ஆண்டுகளாக ஆதரவற்றோர், ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், வயதானோர், புலம்பெயர்ந்தோர் எனப் பலருக்கும் இலவசமாக உணவு அளித்து வரும் நசீர் அகமதை அப்பகுதி மக்கள் பலரும் கடவுள் என்றே அழைக்கின்றனர்.

மனிதம்

ஹிஜாப் விவகாரத்தில் மதங்களை முன்வைத்து பல போராட்டங்களை கர்நாடக மாநிலம் சந்தித்துவரும் இந்த வேளையில் மதங்களைத் துறந்து மனிதத்துக்கான தூதுவராகத் திகழும் நசீர் அகமது குறித்து பல்வேறும் ஆச்சர்யத்துடன் பேசிவருகின்றனர்.

உன் ஹஸ்பண்ட் மேரேஜ் ஃபோட்டோ அனுப்புறேன், பாரு.. ஐயோ, இது என்னோடது.. மணமேடையில் வைத்து கைதான மணமக்கள்

Tags : #KARNATAKA #MAN #FREE FOOD #POOR PEOPLES #HOTEL OWNER #பசி #ஏழைகள் #மாற்றுத் திறனாளிகள் #இலவசமாக உணவு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Karnataka Man provide free food for poor peoples last 10 Years | India News.