கிட்னியை தானமாக கொடுத்த நல்ல மனசுக்காரருக்கு இப்படி ஒரு கஷ்டம் வரணுமா..? மருத்துவனை சொன்ன அதிர்ச்சி தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Feb 16, 2022 04:57 PM

அமெரிக்காவில் கிட்னி தானம் செய்த நபரை பணம் கட்டக் சொல்லி மருத்துவமனை நிர்வாகம் கடிதம் அனுப்பியிருப்பது பலரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

Hospital Sent Massive Medical Bill To Man Who Donated His Kidney

தலைக்கு ஏறிய போதை.. தகாத உறவால் வந்த வினை.. இளைஞர் கைது..!

அறிவியல் தொழில்நுட்பத் துறையில் மனித குலம் வளர்ச்சியடைந்த காரணத்தினால் இன்று உடலுறுப்புகளை தானமாக மக்கள் அளிக்கும் நிலை உருவாகியுள்ளது. பொதுவாக கண்கள், இதயம் ஆகிய உறுப்புகளை தங்களுடைய மரணத்திற்கு பிறகு தானமாக வழங்க பல நல்ல உள்ளம் கொண்டவர்கள் முன்வருகின்றனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் விருப்பப்படும் தகுதியுள்ள எவரும் தங்களது சிறுநீரகத்தை தானமாக அளிக்கலாம்.

இப்படி பெருந்தன்மையுடன் சிறுநீரக தானம் அளித்தவரிடம் சுமார் 10 லட்சம் ரூபாய் தரவேண்டும் என மருத்துவமனை ஒன்று அவருக்கு கடிதம் அனுப்பியிருப்பது பலரையும் கொதித்து எழ வைத்திருக்கிறது.

பழுதடைந்த சிறுநீரகம்

அமெரிக்காவில் 28 வயதான ஸ்காட் கிலைன் என்ற நபர் சிறுநீரக செயலிழக்கும் நிலையில் கடைசி கட்டத்தில் உயிருக்குப் போராடி வந்தார். அதனால் கிலைனின் தாயார் சிறுநீரக தானம் செய்யும் நபரைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் பலரைத் தொடர்பு கொண்டார். இணையம், தொண்டு நிறுவனங்கள் மூலமாக கிலைனின் தாய் முயற்சித்தும் யாருமே சிறுநீரக தானம் செய்ய முன்வரவில்லை.

இந்நிலையில் தனது உறவினரான எலியட் மாலின் என்பவரிடத்தில் கிலைனின் தாய் உதவி கேட்டார். சூழ்நிலையை உணர்ந்த மாலின் சிறுநீரக தானத்திற்கு சம்மதித்திருக்கிறார். அடுத்த சில மாதங்களில் கிலைனின் உடல்நிலை மோசமாகத் துவங்கியுள்ளது. உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறியதை அடுத்து மாலின் விரைந்து வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்.

ஜூலை 2021 இல் டெக்சாஸின் போர்ட் வொர்த்தில் உள்ள மருத்துவமனையில் திட்டமிட்டபடி கிலைனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

Hospital Sent Massive Medical Bill To Man Who Donated His Kidney

லெட்டர்

அறுவை சிகிச்சை முடிந்து இருவருமே வீடு திரும்பியதை அடுத்து, சிறுநீரக தானம் செய்தவரான மாலின் என்பவருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது மருத்துவமனை நிர்வாகம். அதில், சிகிச்சை கட்டணமாக 13,064 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 10 லட்ச ருபாய்) உடனடியாக செலுத்துமாறு  மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மருத்துவ சட்டத்தின்படி, தங்கள் உறுப்பை தானமாக கொடுப்பவர்களுக்கு மருத்துவக் கட்டணங்கள் எதுவும் அனுப்பப்படக் கூடாது. மருத்துவச் செலவுகள் பொதுவாக உறுப்பை பெறுபவரின் காப்பீட்டால் ஈடுசெய்யப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, மாலினின் விஷயத்தில் அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மருத்துவ கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் மாலினை மிரட்டியுள்ளது.

தயாள குணத்துடன் தனது கிட்னியை தானமாக அளிக்க வந்தவரை மருத்துவமனை நிர்வாகம் பணம் செலுத்த வற்புறுத்தியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

மன்னிப்பு

இதனையடுத்து மருத்துவனை நிர்வாகத்தின் தலைமை செயல் அதிகாரி மாலினுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியிருக்கிறார். அதில்,"மருத்துவனை நிர்வாகம் தவறுதலாக செய்த காரியத்திற்கு நான் தனிப்பட்ட முறையில் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். மிகவும் அரிதாக நடைபெறும் இதுபோன்ற தவறுகளை வருங்காலத்தில் செய்யாமல் இருக்க நிர்வாகம் கடினமாக உழைக்கும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

"என் உடம்புக்குள்ள சிப் இருக்கு".. அஜித் தோவல் வீட்டிற்குள் நுழைந்த நபர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்..!

Tags : #HOSPITAL #MASSIVE MEDICAL BILL #MAN #DONATED HIS KIDNEY #கிட்னி தானம் #பழுதடைந்த சிறுநீரகம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Hospital Sent Massive Medical Bill To Man Who Donated His Kidney | World News.