'உங்க மேல ஒரு கம்ப்ளெயின்ட் இருக்கு...' 'ஒழுங்கா ஃபைன் கட்டுங்க...' 'கம்ப்ளெயின்ட் பார்த்து ஆடிப்போன மனுஷன்...' - ஒரு 'லாரி டிரைவருக்கு' இப்படியெல்லாமா சோதனை வரும்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாலாரி டிரைவர் ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டியதாக ரூ.1000 அபராதம் வசூலித்த கொடுமை ஒடிசாவில் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் லாரி ஓட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார் லாரி டிரைவர் புரோமோத் குமார் ஸ்வெயின்.
புரோமோத் தன் லாரியின் பர்மீட்டை புதுப்பிக்க போக்குவரத்துத் துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது லாரி பதிவேட்டு எண்ணின் நிலுவைத் தொகை குறித்து ஆராய்ந்தபோது, கடந்த டிசம்பரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய புகார் நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் கூறியதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
புரோமோத் தான் 3 வருடங்களாக இந்த லாரியை ஓட்டி வருவதாகவும், தண்ணீர் விநியோகிக்கும் பணியை தான் செய்து வருவதாக கூறி அதிகாரிகளிடம் கெஞ்சியுள்ளார்.
ஆனால், அபராதம் செலுத்தினால் மட்டுமே லாரியின் பர்மீட்டிற்கு அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்பின் லாரி ஓட்டும் போது ஹெல்மெட் அணியாமல் இருந்ததற்காக புரோமோத் அபராதத்தை கட்டியுள்ளார். அதன்பின்னரே அவரின் லாரியின் பர்மீட்டை புதுப்பித்து அளித்துள்ளனர் போக்குவரத்து துறை அதிகாரிகள்.
இதுகுறித்து கூறிய புரோமோத், 'நான் பர்மீட்டை புதுப்பிக்க வந்தபோது தான் இது குறித்து அறிந்தேன். பல ஆண்டுகளாக நான் லாரி தான் ஓட்டிவருகிறேன். மக்களை காரணமே இல்லாமல் அபராதம் செலுத்த சொல்லி நிர்பந்திக்கிறார்கள். இதற்கு அரசு தான் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனம் நொந்து கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
