‘தமிழகத்தில் 1173 பேருக்கு கொரோனா!’.. 11 பேர் பலி.. சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1000-ஐ கடந்து உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 12) மேலும் 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து இன்றைய தினம் (ஏப்ரல் 13) மேலும் 98 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர்களின் எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றுக்கு தமிழகத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக தமிழகத்தில் இதுவரை 8 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகத் தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், இதுவரை 12746 ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டதாகவும், இதில் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
Tags : #CORONA #CORONAVIRUS
