மரணமடைந்த பிரபல நடிகர் சதீஷ் கௌஷிக்.. கடைசியாக எழுதிய பதிவு.. உடைந்துபோன ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Mar 09, 2023 10:30 PM

பிரபல இயக்குனரும் நடிகருமான சதீஷ் கௌஷிக் இன்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் கடைசியாக எழுதிய பதிவு ரசிகர்களுக்கு மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Late Actor Satish Kaushik last post in Instagram goes viral

சதீஷ் கௌஷிக்

பாலிவுட் திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகராக புகழ்பெற்றவர் சதீஷ் கௌஷிக். ஏப்ரல் 13, 1965 அன்று ஹரியானாவில் பிறந்த சதீஷ் ஆரம்ப நாட்களில் நாடகங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு, மாதூம் என்ற இந்தித் திரைப்படத்தில் சேகர் கபூருக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்தார். திரைக்கதை மற்றும் வசன கர்த்தாவாகவும் சதீஷ் பணியாற்றியிருக்கிறார். கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் இந்தியா மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார். அந்தப் படத்தில் காலண்டர் எனும் கதாப்பாத்திரத்தில் சதீஷ் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து பல்வேறு நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து பெரும்பாலான மக்களை கவர்ந்து வந்தார்.1990 இல் ராம் லக்கானுக்காகவும் 1997 இல் சாஜன் சாலே சசுரலுக்காகவும் சதீஷ் கௌசிக் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றிருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இயக்குநர்

சதீஷ் கௌஷிக் முதன் முதலில் இயக்கிய படம் ரூப் கி ராணி சோரோன் கா ராஜா ஆகும். ஸ்ரீதேவி, அணில் கபூர் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் 1993 ஆம் ஆண்டு வெளியானது. இதனையடுத்து பிரேம் படத்தையும் அவர் இயக்கினார். தமிழில் பாலா இயக்கி வெளியான படம் சேது. சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்து பெருவாரியான மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தை இந்தியில் 'தேரே நாம்' என்ற பெயரில் சதீஷ் இயக்கினார்.

Image Credit : Satish Kaushik | Instagram 

இந்த நிலையில் இன்று அதிகாலை சதீஷ் கௌஷிக் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பால் சதீஷ் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

கடைசி பதிவு

இந்த சூழ்நிலையில் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக எழுதியிருந்த பதிவு ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது. ஜாவித் அக்தர் இல்லத்தில் நடைபெற்ற ஹோலி தின கொண்டாட்டத்தில் சதீஷ் கலந்துகொண்டார். அதில் நடிகர் அலி ஃபைசல் அவருடைய மனைவி ரிச்சா ஆகியோருடன் சதீஷ் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து,"நண்பர் ஜாவித் அக்தர் ஏற்பாடு செய்திருந்த வண்ணமயமான கொண்டாட்டம் நிறைந்த ஹோலி பார்ட்டியில் கலந்துகொண்டேன். புதுமண தம்பதிகளான அலி ஃபைசல் மற்றும் ரிச்சாவை சந்தித்தேன். அனைவர்க்கும் இனிய ஹோலி பண்டிகை தின வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

Tags : #SATISH KAUSHIK #ACTOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Late Actor Satish Kaushik last post in Instagram goes viral | India News.