நடிகரின் மரணத்தால் நிலைகுலைந்துபோன குடும்பம்.. இசையமைப்பாளர் D. இமான் செஞ்ச உதவி.. நெகிழ்ச்சி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மறைந்த நடிகர் பவுன் ராஜின் குடும்பத்தினருக்கு இசையமைப்பாளர் D.இமான் உதவி செய்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | முதுகில் ஆப்ரேஷன்.. தொடர் ஓய்வில் பும்ரா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்னதான் ஆச்சு..?
பவுன் ராஜ்
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்தப் படத்தை பொன்ராம் இயக்கி இருந்தார். இதில் நடித்திருந்த பவுன் ராஜ்-ன் கதாப்பாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்திலும் பவுன் ராஜ் நடித்திருந்தார். இயக்குனர் பொன்ராமிடம் இணை இயக்குனராக பணிபுரிந்து வந்த பவுன்ராஜ் கடந்த ஆண்டு மாரடைப்பால் காலமானார். இது திரையுலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
அவரது மரணத்திற்கு பிறகு அவருடைய மனைவி பெரும் கஷ்டங்களை சந்தித்து வந்திருக்கிறார். இந்நிலையில், இதுகுறித்து கேள்விப்பட்ட இசையமைப்பாளர் டி.இமான் ஓடோடி சென்று அவருக்கு உதவி செய்திருக்கிறார். இதுகுறித்து நம்முடைய சேனலுக்கு அவர் நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
உதவி
அதில் பேசியுள்ள இமான்,"கோவிலுக்கு போய் உண்டியலில் பணம் போடுறது மட்டும் இறைப்பணி கிடையாது. நாம எல்லோரும் அதை செய்வோம். ஆனா, இப்படி உதவி தேவைப்படும் நபர்களுக்கு செய்யணும்னு தோணுச்சு. சமூக ஆர்வலர் உமா மூலமாக தான் அவங்களை பத்தி கேள்விப்பட்டேன். முதல்ல, அவங்க இருக்க பகுதியிலேயே எதாவது மாத சம்பளம் கிடைக்குற மாதிரி வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க முடிவெடுத்தேன். என் நண்பர்கள் கிட்டயும் இதை பத்தி பேசியிருந்தேன். ஆனால், அவங்களுக்கு குழந்தைகள் இருப்பதாக உமா சொன்னாங்க. ஆகவே, வீட்ல இருந்துட்டே பார்க்குற மாதிரி ஒரு தொழில் ஏற்படுத்தி கொடுக்கணும்னு முடிவெடுத்தோம்" என்றார்.
Images are subject to © copyright to their respective owners.
தொழில்முனைவோர்
பணத்தை கொடுப்பதன் மூலம், அவர்களுடைய வாழ்க்கையை சரிசெய்ய முடியாது எனவும் ஆகவே அவரை ஒரு தொழில்முனைவோராக ஆக்க வேண்டும் என நினைத்ததாகவும் கூறியுள்ளார் இமான். தொடர்ந்து பேசிய அவர்,"அவரை ஒரு பிசினஸ் வுமனாக மாற்ற முடிவெடுத்தோம். அப்போ தான் அவங்களால நம்பிகையோட வாழ்க்கையை எதிர்கொள்ள முடியும். அவங்க குழந்தைகளும் எங்க அம்மா ஒரு பிசினஸ் வுமன்னு பெருமையா சொல்லிக்க முடியும். அதுனால வீட்டுலயே மாவு அரைத்து விற்பனை செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி கொடுத்தேன். இது என்னால செஞ்சுட முடியும்னு நெனைச்சதால வேற யார்கிட்டயும் இத பத்தி பேசல" என்றார்.
Also Read | சிகிச்சைக்காக சென்னை வந்த வங்கதேச பெண்.. விமானத்தில் திடீர் மரணம்.. பரபரப்பான சென்னை விமான நிலையம்..!