"FAKE ACCOUNT-ல இருந்து அவசரம்னு பணம் கேட்டு மெசேஜ்".. பிரபல இயக்குநர் நடிகர் ரவி பரபரப்பு புகார்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Mar 01, 2023 10:32 PM

சோசியல் மீடியாவில் தன்னுடைய பெயரை பயன்படுத்தி சிலர் பணம் பறித்து வருவதாக பிரபல நடிகர் ரவி மரியா காவல்துறையில் இன்று புகார் அளித்திருக்கிறார்.

Actor Ravi Maria gives complaint In Police about Fraudulent gang

                       Images are subject to © copyright to their respective owners.

கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான குஷி படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி, பின்னர் ஜீவா நடித்த 'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவி மரியா. இவரின் முதல் படத்திற்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, நட்டி நடராஜ் நாயகனாக நடித்த மிளகா படத்தையும் இயக்கி இருந்தார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மனம் கொத்திப்பறவை படத்தில் ரவி மரியாவின் கதாப்பாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் போலவே சில மோசடி நபர்கள் ஒரு பக்கத்தினை உருவாக்கி அதன் மூலம், பலரிடமும் பணம் கேட்டு தொந்தரவு அளிப்பதாக காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர்,"என்னுடைய இஸ்டாகிராம் அக்கவுண்ட் மாதிரியே ஒரு போலி அக்கவுண்ட்டை துவங்கி அதன் மூலம் எனக்கு தெரிந்தவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் கேட்டிருக்கிறார்கள். சிலர் பணத்தையும் அனுப்பி உள்ளனர். இவ்வளவு கால சினிமா வாழ்க்கையில் நான் பிறருக்கு உதவியிருக்கிறேனே தவிர, யாரிடமும் பணம் கடனாக பெற்றதில்லை. ஆகவே, யாரும் ஏமாந்துவிடாதீர்கள்" என்றார்.

மேலும், காவல்துறையில் புகார் அளித்திருப்பது குறித்து பேசிய ரவி மரியா," செயின்ட் தாமஸ் மவுண்ட்டில் உள்ள தெற்கு மண்டல காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் கொடுத்திருக்கிறேன். ஏழை, எளிய மக்கள் கஷ்டப்பட்டு சேகரித்த பணத்தை இந்த மோசடி கும்பல்கள் எப்படி கொள்ளையடிக்கின்றனர்? என்பது பற்றி போலீசார் தெரிவித்தனர். கேட்கவே அதிர்ச்சியாக இருந்தது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

Images are subject to © copyright to their respective owners.

மக்கள் இதுபோன்ற திருட்டுக்களில் இருந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது பற்றி பேசிய அவர்,"எத்தனையோ வீடியோக்களை பார்ப்பதற்கு நாம் நேரம் செலவிடுகிறோம். ஆனால், பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இதுபோல நடைபெறும் குற்றங்கள் குறித்து அவ்வப்போது வீடியோ வெளியிடுகிறார். அதனை பார்த்து திருடர்கள் கையாளும் முறைகளை அறிந்துகொள்ள வேண்டும். பாதுகாப்பான முறையில் இணையத்தை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.

Tags : #RAVI MARIA #ACTOR #POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Actor Ravi Maria gives complaint In Police about Fraudulent gang | Tamil Nadu News.