கடைசியாக நடித்த படம்.. ரிலீஸ் ஆவதற்கு முன்பே மறைந்த பிரபல நடிகர் & இயக்குனர்.. இரங்கல் தெரிவித்த பூஜா ஹெக்டே!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்று அதிகாலை இயக்குனர் & நடிகர் சதீஷ் கௌஷிக் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பால் சதீஷ் கௌஷிக் காலமானார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "விடுதலை பட ரயில் செட்டுக்கு மட்டும் இம்புட்டு கோடி செலவு".. வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!
பாலிவுட் திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகராக புகழ்பெற்றவர் சதீஷ் கௌஷிக். மாதூம் என்ற இந்தித் திரைப்படத்தில் சேகர் கபூருக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தார். திரைக்கதை மற்றும் வசன கர்த்தாவாகவும் சதீஷ் சில படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் இந்தியா மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார். அந்தப் படத்தில் காலண்டர் எனும் கதாப்பாத்திரத்தில் சதீஷ் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து பல்வேறு நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து பெரும்பாலான மக்களை கவர்ந்து வந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
1990 இல் ராம் லகானுக்காகவும், 1997 இல் சாஜன் சாலே சசுரலுக்காகவும் சதீஷ் கௌசிக் அடுத்த தலைமுறை ரசிகர்களால் அறியப்படுகிறார்.
சதீஷ் கௌஷிக் முதன் முதலில் இயக்கிய படம் ரூப் கி ராணி சோரோன் கா ராஜா ஆகும். ஸ்ரீதேவி, அனில் கபூர் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் 1993 ஆம் ஆண்டு வெளியானது. இதனையடுத்து பிரேம் படத்தையும் அவர் இயக்கினார். தமிழில் பாலா இயக்கி வெளியான படம் சேது. இந்த படத்தை இந்தியில் 'தேரே நாம்' என்ற பெயரில் சதீஷ் கௌஷிக் இயக்கினார்.
Images are subject to © copyright to their respective owners.
இதில், சல்மான் கான், பூமிகா ஆகியோர் நடித்திருந்தனர். இது இந்தியிலும் பெருமளவு பேசப்படும் படமாக சதீஷ் கௌஷிக்கிற்கு அமைந்தது. அதுமட்டும் அல்லாமல் பல படங்களை தயாரித்தும் உள்ளார் சதீஷ்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் சதீஷ் கௌஷிக், சல்மான் கான் & பூஜா ஹெக்டே நடித்துள்ள கிஷி கா பாய் கிஷி கி ஜான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படத்தை பகிர்ந்து நடிகை பூஜா ஹெக்டே, சதீஷ் கௌஷிக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
அந்த பதிவில், "சிறுவயதில் இவர் நடித்த படங்களை கண்டு வளர்ந்தேன். விதியின் படி இவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு அமைந்தது. இனிமையான மிகவும் நகைச்சுவை உணர்வு மிக்கவர் சதீஷ் ஜி. அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். படங்களின் வழியாக என்றும் நீங்கள் எங்களுடன் இருப்பீர்கள்" என பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார்.
Also Read | விடுதலை -ல் விஜய் சேதுபதி ROLE-ல நடிக்கவிருந்த பாரதிராஜா.. என்ன ஆச்சு? - வெற்றிமாறன்!