“டிக்டாக்கிற்கு மாற்றாக சந்தையில் புதிய வசதியை களமிறக்கிய” இன்ஸ்டாகிராம்!.. டிக்டாக் ரசிகர்களை வெல்லுமா?
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்இந்திய சீன எல்லைப் பிரச்சனையைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்புக் காரணங்கள் மற்றும் தனியுரிமை காரணங்களால் டிக்டாக், ஹெலோ ஆப் உள்ளிட்ட சீனாவின் 59 ஆப்கள் தடை செய்யப்பட்டன.
ஆனால் திறமைகளை வெளிக்காட்டிக் கொள்ள பலரும் டிக்டாக்கை பயன்படுத்தி வந்த நிலையில், இந்த தடைக்கு பிறகு அவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறிவந்த சூழலில் டிக்டாக்கிற்கு மாற்றாக பல புதிய செயலிகள் சந்தைக்குள் களமிறங்கி வருகின்றன.
இந்த நிலையில், சமூக வலைதளங்களின் முதன்மையான நிறுவனமான பேஸ்புக் தனது நிறுவனமான இன்ஸ்டாகிராம் மூலமாக புது வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்கிற இந்த வசதி மூலம் 15 விநாடிகளுக்குள் சிறிய வீடியோக்களை பதிவு செய்து ஷேர் செய்யும் வசதியைக் கொண்டுவந்துள்ளது.
இன்ஸ்டாகிராமின் இந்த வசதி டிக்டாக்கை ரிப்ளேஸ் செய்யுமா? ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுமா? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.