'அந்த பொண்ணுகிட்ட இருந்து... முதல்முறையா 'வீடியோ கால்' வந்துச்சு!.. ATTEND பண்ணதும் ஆடிப்போயிட்டேன்'! - இணையத்தை அதிரவைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆண் நண்பரை வீடியோ காலில் நிர்வாணமாக பேச வைத்து, அதனை ரெக்கார்ட் செய்து நூதன முறையில் பண மோசடி அரங்கேறியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் Graphic designer ஆக பணியாற்றிவருகிறார். அவரும் 'ப்ரக்யா' என்ற ஒரு பெண்ணும் சமூக வலைதளத்தில் நட்பாகப் பழகிவந்துள்ளனர்.
இந்நிலையில், ப்ரக்யா அவரிடம் வீடியோ காலில் பேச விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதை அவரும் ஒப்புக்கொள்ளவே, அந்த பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.
அழைப்பை ஏற்ற வாலிபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீடியோ காலில் அந்த பெண் நிர்வாணமாக இருந்துள்ளார். மேலும், 3 விநாடிகளில் அந்த வீடியோ கால் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
அதன் பிறகு, அவரிடம் மீண்டும் மெசேஜ் செய்த ப்ரக்யா, வாலிபரையும் நிர்வாணமாக வீடியோ கால் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். அவரும் நிர்வாணமாக வீடியோ கால் செய்து பேசியுள்ளார். அப்போது அவருக்கு தெரியாமல் அதனை ப்ரக்யா ரெக்கார்ட் செய்துள்ளார்.
பின்னர், வீடியோ கால் நிறைவடைந்த உடன், வாலிபருக்கு ப்ரக்யாவிடமிருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், 20,000 ரூபாய் கொடுக்காவிட்டால், அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அந்த நிர்வாண வீடியோவை அனுப்பிவைக்கப்போவதாக மிரட்டியுள்ளார்.
அதையடுத்து, ப்ரக்யாவின் வங்கிக் கணக்குக்கு 2,000 ரூபாய் போட்டுள்ளார் அந்த வாலிபர். ஆனால், ப்ரக்யாவோ அந்த வாலிபரின் தோழிக்கு அவரது நிர்வாண வீடியோவை அனுப்பிவிட்டார். அதைத் தொடர்ந்து, மீதமுள்ள தொகையையும் ப்ரக்யாவின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டது.
சில நாட்கள் கழித்து மீண்டும் பணம் வேண்டி, ப்ரக்யா அந்த வாலிபரை தொல்லை செய்துள்ளார். இதையடுத்து, வாலிபர் போலீசில் புகார் அளித்த பின், விசாரணையில் அந்த வங்கிக் கணக்கு 'லாலு பிரசாத் ப்ரக்யா ஜெயின்' என்ற ஒரு ஆணின் பெயரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலியாக ஒரு பெண்ணின் பெயரை பயன்படுத்தி, இணையத்தில் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
