அதிக ANTACIDS.? இதயத்துல பிளாக்.?.. பாடகர் KK குறித்து பரபரப்பை ஏற்படுத்திய DOCTOR-கள் ரிப்போர்ட்.?
முகப்பு > செய்திகள் > இந்தியாஹிந்தி, தமிழ் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் தன்னுடைய பாடல்களால் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்தவர் கேகே என்கிற கிருஷ்ணகுமார் குன்னத்.
தமிழில் மட்டும் சுமார் 60 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள கேகே, மெலோடி, குத்துப் பாடல் என அனைத்து ஏரியாவிலும் தூள் கிளப்பி உள்ளார்.
கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கேகேவிற்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் கூறப்படுகின்றன. மாரடைப்பின் காரணமாக கேகே உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இதயத்தில் இருந்த பிளாக்குகள்?
இதனைத் தொடர்ந்து, கேகே உடலை ஆய்வு செய்து பார்த்த போது, அவரின் உடல்நிலை குறித்து பல தகவல்கள், தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, கேகேவின் இடது தமினியில் 80 சதவீத அடைப்புகளும், சிறிய தமினியில் நிறைய அடைப்புகள் இருந்ததும் தெரிய வந்தது. அதே போல, தனது இதயத்தில் நிறைய பிளாக்குகள் இருந்தது கூட தெரியாமல் தான், கேகே இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அடிக்கடி நெஞ்சு எரிச்சல் அதிகம் இருந்ததன் பெயரில், Antacids எடுத்துக் கொண்டதும் தெரிய வந்துள்ளது.
Antacids மருந்துகள்
முன்னதாக, தனது இதயத்தில் தான் பிரச்சனை உள்ளது என்பதை முன்னரே கேகே தெரிந்து கொண்டிருந்தால், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை தவிர்க்கக் கூட செய்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. கேகே தங்கி இருந்த விடுதியில் கூட, நிறைய Antacids மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இசை நிகழ்ச்சிக்கு பின்னர், கேகேவிற்கு மாரடைப்பு ஏற்பட்ட போது, முதலுதவியான CPR-ஐ உடனே கொடுத்திருந்தால் கூட, அவரது உயிரைக் காப்பாற்ற வழி உருவாகி இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காரணம் என்ன?
கொல்கத்தா இசை நிகழ்ச்சியில், தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் வரை பாட்டு பாடி வந்ததால், இதயத்திற்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் நிறுத்தப்பட்டதால் தான் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அதே போல, கேகேவின் மறைவுக்கு மாரடைப்பு தான் காரணம் என்றும், வேறு எந்தவொரு காரணமும் இல்லை என்றும் மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.