KL ராகுலுக்கு அபராதம்.. ஸ்டோனிஸிக்கு எச்சரிக்கை.. IPL நிர்வாகம் அதிரடி ஆக்ஷன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுலக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 31-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 181 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டு பிளேசிஸ் 96 ரன்களும், சபாஷ் அகமது 26 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணி, 20 ஓவர்களில் 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த போட்டியில் விளையாடிய லக்னோ அணியின் கேப்டன் ராகுலுக்கு அபராதமும், அந்த அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டானிஸிக்கு எச்சரிக்கையும் ஐபிஎல் நிர்வாகம் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியில் இருவரும் ஆட்டமிழந்த பின் எதிரணியை வார்த்தைகளால் வசை பாடினார். இது அப்படியே ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.
அதனால் கேப்டன் கே.எல்.ராகுல் போட்டி ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமும், மார்கஸ் ஸ்டோனிஸிக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் விதிமுறைப்படி, இப்படி எதிரணி வீரர்களை வசைபாடும் போது முதல் முறை எச்சரிக்கை விடப்படும். ஆனால் அணியின் கேப்டன் இந்த காரியத்தை செய்து இருந்தால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும். அந்த வகையில்தான் தற்போது கே.எல்.ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Also Read | “கடவுள் மாதிரி வந்து ரெய்னா ஹெல்ப் பண்ணார்”.. உருக்கமாக பேசிய SRH இளம் வீரர்..!