LOVE'க்காக இப்படியா??.. காதலிக்காக இரவு முழுவதும் பெண்கள் கழிவறையில் இருந்த காதலன்?.. "சிசிடிவி'ய பாத்தப்போ தான் உண்மை தெரிய வந்துருக்கு.."
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக, காதல் என்பது இந்த உலகத்தில் உள்ள பலரது மத்தியில் பரவலாக இருந்து வரும் ஒன்று தான்.
மேலும், ஒருவருக்கு ஒருவர் தங்களின் காதலின் ஆழத்தை வெளிப்படுத்திக் கொள்வதற்காக, வித்தியாசமான சர்ப்ரைஸ் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்று தான்.
ஆனால், பெங்களூர் பகுதியில் இளைஞர் ஒருவர், தனது காதலிக்காக செய்த விஷயம் ஒன்று பலரையும் பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது.
பெங்களூரின் ஜேபி நகர் என்னும் பகுதியில், மிகப்பெரிய எலக்ட்ரானிக் ஷோரூம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கே நாளுக்கு நாள், ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் நிலையில், அங்கே நுழைந்த இளைஞர் அப்துல் முனாஃப் என்பவர், ஒரு அதிர்ச்சி திட்டம் ஒன்றை போட்டுள்ளார். அதன்படி, இரவு நேரம் கடை மூடும் நேரத்தில், நைசாக ஷோரூம் உள்ளேயே பெண்கள் கழிவறையில் அப்துல் முனாஃப் ஒளிந்துள்ளார்.
தொடர்ந்து, இரவு நேரம் கடை மூடிய பிறகு, பெண்கள் கழிவறையில் இருந்து வெளியே வந்த அப்துல், விலை உயர்ந்த ஏழு செல்போன்களையும் எடுத்துக் கொண்டு, மீண்டும் அங்கே இருந்த பெண்கள் கழிவறைக்கு சென்று ஒளிந்துள்ளார். இதன் பின்னர், மறுநாள் காலையில் வழக்கம் போல அந்த எலக்ட்ரானிக் ஷோரூம் திறந்த பிறகு, யாருக்கும் தெரியாமல் மெல்ல அங்கிருந்து அப்துல் தப்பித்தும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தமாக ஏழு போன்களை கொண்டு செல்ல அப்துல் முயற்சி செய்த நிலையில், அதில் ஒன்று, ஷோரூம் தரையில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. போன் ஒன்று தரையில் கிடப்பதை ஊழியர் ஒருவர் கண்டதும் சந்தேகம் எழவே, உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் பார்த்துள்ளனர். அப்போது, இளைஞர் அப்துல் வந்து சென்றது, தெரிய வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட, காணாமல் போன மொபைலின் IMEI நம்பரை வைத்து, திருடப்பட்ட செல்போன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, அதனை திருடிய அப்துலை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ரெஸ்டாரண்டில் வேலை பார்த்து வரும் அப்துல், மங்களூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், தனது காதலியை Impress செய்ய விலையுயர்ந்த பரிசை அளிக்க வேண்டுமென முடிவு செய்த அப்துல், எலக்ட்ரானிக் ஷோரூமில் ஒளிந்து இருந்து மொபைல் போனை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதன் பின்னர் சிசிடிவி மற்றும் இஎம்ஐ நம்பர் உள்ளிட்ட தகவலால் அப்துல் முனாஃப் போலீஸிடம் சிக்கி உள்ளார்.
Also Read | வீடு ஃபுல்லா கோடி கணக்குல பணம்.. "ஆனா அது என் பணமே இல்ல.." நடிகை விளக்கம்