செல்போன் டவர் மீது வேகமாக ஏறிய பெண்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்.. "கடைசில நடந்த யாரும் எதிர்பாராத சம்பவம்.."
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலத்தில், பெண் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறிச் சென்ற நிலையில், கடைசியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்துள்ளது காயம்குளம் என்னும் பகுதி. இப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள BSNL செல்போன் டவர் மீது பெண் ஒருவர் ஏறி உள்ளார்.
முன்னதாக, அவரது கணவருடன் குடும்ப தகராறு ஏற்பட்டு, அதன் பின்னர் இந்த டவரில் ஏறி மிரட்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக வந்த போலீசார்
அது மட்டுமில்லாமல், தனது குழந்தையை கணவர் எடுத்துச் சென்றதாகவும், அவர் திருப்பித் தந்தால் தான், கீழே இறங்குவேன் என்றும் அந்த பெண் கூறிக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. இதனால், அப்பகுதியில் இருந்தவர்கள் மத்தியில், கடும் பரபரப்பு நிலவி இருந்தது. இதனைத் தொடர்ந்து, BSNL ஊழியர் ஒருவர், போலீசாருக்கு இது பற்றி தகவல் தெரிவித்ததை அடுத்து, உடனடியாக போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
எதிர்பாராத சம்பவம்
மேலும், அந்த பெண்ணை கீழே இறக்குவதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டனர். ஆனால், அவை எதுவும் பலனளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அந்த பெண் தன்னுடைய முடிவில் தீவிரமாக இருந்தார். தொடர்ந்து, அந்த பெண் டவர் மீது ஏறிய சமயத்தில் தான், யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் அங்கு நிகழ்ந்துள்ளது. டவரில் இருந்த குழவி கூடு ஒன்றை, அந்த பெண் தெரியாமல் கலைத்து விட்டுள்ளார்.
கொட்டிய குழவி
இதன் காரணமாக, அதிலிருந்த குளவிகள் அந்த பெண்ணை சுற்றி வளைத்தது மட்டுமில்லாமல், அவரை சில குளவிகள் கொட்டவும் செய்துள்ளது. இதன் பின்னர், வேகமாக அந்த பெண் டவரில் இருந்து கீழே இறங்கி வந்ததோடு மட்டுமில்லாமல் பயத்தில் அலறவும் செய்துள்ளார். கொஞ்சம் அருகே வந்ததும், அவர் அங்கிருந்து தரையில் குதிக்க முற்பட, தீயணைப்பு பணியாளர்கள் பிடித்திருந்த வலையில் அவர் விழுந்தார்.
பிறகு, அவரை மருத்துவமனையில் அதிகாரிகள் சேர்த்த நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். அதே போல, குளவிகள் இல்லை என்றால், அந்த பெண் நிச்சயம் கீழே இறங்கி இருக்க மாட்டார் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இறுதியில், அந்த பெண்ணுக்கும் அவரின் கணவருக்கும் இடையே உள்ள பிரச்சனை குறித்தும், போலீசார் விசாரித்ததாக கூறப்படுகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8