‘மூல நோய் சிகிச்சை ரகசியம்’.. நாட்டு வைத்தியரை கடத்திச் சென்று செய்த கொடுமை.. 3 வருசம் கழித்து வெளியவந்த திடுக்கிடும் தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 12, 2022 02:46 PM

சிகிச்சை ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காக நாட்டு வைத்தியரை கடத்தி நடந்த கொடுமை திடுக்கிட வைத்துள்ளது.

Kerala police solve Mysore healer missing case after 3 year

Also Read | “காப்பாத்துங்க.. காப்பாத்துங்க..” சூறாவளி காற்றடித்து நடுக்கடலில் மூழ்கிய படகு.. தூத்துக்குடியில் பரபரப்பு..!

கர்நாடக மாநிலம் மைசூரு ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஷாபா செரீப் (வயது 60). பாரம்பரிய நாட்டு வைத்தியரான இவர், மைசூருவில் மூல நோய்க்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவரிடம் சிகிச்சை பெற்றவர்களுக்கு விரைவில் நோய் குணமடைந்ததால், நாளுக்கு நாள் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஷாபா செரீபிடம் சிகிச்சை பெறுவதற்காக ஏராளமானோர் வந்துள்ளனர்.

இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷாபா செரீப் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது உறவினர்கள் மைசூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து வைத்தியர் ஷாபா செரீபை தேடி வந்தனர். ஆனால் 3 வருடங்களாக அவரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் கைப்பஞ்சேரியை சேர்ந்த ஷெபின் அஷ்ரப் (வயது 42) என்ற தொழிலதிபர், நிலம்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தன்னுடைய உதவியாளர் நவுஷாத் உட்பட 7 பேர் வீடு புகுந்து தன்னை கட்டிப்போட்டு 7 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஷெபினின் உதவியாளர் நவுஷாத் என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்ற கூட்டாளிகள் 6 பேரை தேடி வந்தனர்.

Kerala police solve Mysore healer missing case after 3 year

இதனிடையே இவர்களில் 5 பேர் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன் தீக்குளிக்க முயன்றனர். இதனை அடுத்து திருவனந்தபுரம் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் வெளியாகியுள்ளன.

அதில் மைசூரை சேர்ந்த நாட்டு வைத்தியர் ஷாபா செரீப்பை கடத்தி, மூலம் நோய்க்கான சிகிச்சை ரகசியத்தை தெரிந்து கொண்டு தானும் அந்த நோய்க்கு சிகிச்சை தொடங்கி பணம் சம்பாதிக்க ஷெபின் அஷ்ரப் திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 3 வருடங்களுக்கு முன் வைத்தியர் ஷாபா செரீபை மைசூருவிலிருந்து அவர் கடத்தியுள்ளார். பின்னர் நிலம்பூரிலுள்ள தன்னுடைய வீட்டில் தனி அறையில் அடைத்து வைத்து சிகிச்சை ரகசியத்தை தன்னிடம் கூறுமாறு ஷாபா செரீப்பை மிரட்டியுள்ளார். ஆனால் அவர் கூற மறுத்தார். ஒரு வருடத்திற்கு மேலாக அடித்து கொடுமைப்படுத்தியும் அவர் சிகிச்சை ரகசியத்தை கூறவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2020 அக்டோபர் மாதம் ஷெபின் அஷ்ரப் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து வைத்தியர் ஷாபா செரீப்பை கொன்று ஆற்றில் வீசியுள்ளார். இதனிடையே வைத்தியர் ஷாபா செரீப்பை அடித்துக் கொடுமைப்படுத்தியதை ஷெபின் அஷ்ரப்பின் கூட்டாளிகள் ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்தனர். இந்த வீடியோவை கைப்பற்றிய போலீசார் அதை ஷாபா செரீப்பின் உறவினர்களுக்கு காண்பித்தனர். அந்த வீடியோவில் இருப்பது ஷாபா செரீப் தான் என்பதை அவரது உறவினர்கள் உறுதி செய்தனர்.

இதனை அடுத்து தொழிலதிபர் ஷெபின் அஷ்ரப் மற்றும் அவரது கூட்டாளிகளான சிகாபுதீன் (வயது 36), நவுஷாத் (வயது 33) மற்றும் நிஷாத் (வயது 31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சிகிச்சை ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காக வைத்தியரை கடத்தி கொடுமைப்படுத்தி கொன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

Tags : #KERALA #POLICE #MYSORE #HEALER MISSING CASE #ARREST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala police solve Mysore healer missing case after 3 year | India News.