அவசர அவசரமாக லிஃப்டில் ஏறிய நபர்.. அதற்குள் வேகமாக மூடிய கதவு.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாலிப்ட்டில் தலை சிக்கி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | “சாப்பாடு போட்ட என்கிட்டயே இப்படி பண்ணிட்டானே”.. கோயில் திருவிழாவுக்கு வரி கட்ட வாலிபர் செஞ்ச காரியம்..!
கேரள மாநிலம், பேரூர்கடா அருகே பாமாம் கோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 59). இவருக்கு அஞ்சனா என்ற மனைவியும், கௌரி கிருஷ்ணா என்ற ஒரு மகளும் உள்ளனர். சதீஷ்குமார் பேரூர்கடா அருகே இயங்கி வரும் கடை ஒன்றில் 18 வருடங்களாக ஸ்டோர் கீப்பர் வேலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
நான்கு மாடி கட்டிடங்கள் கொண்ட இந்த நிறுவனத்தில் நேற்று அலுவல் நிமித்தமாக நாலாவது மாடிக்கு செல்வதற்காக சதீஷ்குமார் லிஃப்டில் ஏறியதாக சொல்லப்படுகிறது. அப்போது அவர் அவசர அவசரமாக லிஃப்ட்டில் ஏற முயன்றதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக அவரது தலை வெளியே இருந்த போது லிஃப்ட் கதவு மூடியுள்ளது. உடனே மூன்றாவது மாடியில் இருந்து நாலாவது மாடிக்கு மேல் நோக்கி லிஃப்ட் புறப்பட்டு விட்டது.
அப்போது லிஃப்ட்டின் மேல் சுவரில் இவருடைய தலை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், சதீஷ் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லிஃப்டில் தலை சிக்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
