VIDEO: 'வாவ்...! என்ன ஒரு CONFIDENCE...' 'சந்து கேப்ல சட்டுன்னு வண்டிய திருப்பிட்டாரு...' - கணவனின் திறமையை வீடியோ எடுத்த மனைவி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Sep 08, 2020 08:01 PM

கேரள மாநிலத்தில் ஒருவர் காரினை லாவகமாக பார்க் செய்யும் வீடியோ தற்போது சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

kerala person parking car gracefull viral video social media

கேரளா ஓட்டுனர்கள் எப்போதும் ஒரு மிடுக்கான ஓட்டுநர்களாகவே பார்க்கப் படுகின்றனர். அதற்கு சற்றும் குறையாத நிலையில் தற்போது ஓரு வீடியோ சமூக வளைத்தளங்களில் பரவி வருகிறது.

கேரளா மனந்தவாடியைச் சேர்ந்த பி.ஜே. பிஜு என்னும் நபர் வெள்ளை இன்னோவா காரை, ஒரு குறுகிய இடத்தில் நிறுத்தும் நிகழ்வு வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது.

காரை ஓட்டியவரின்  மனைவி தன்னுடைய வீட்டில் இருந்து எடுத்த இந்த வீடியோ பல மில்லியன் views-களை பெற்றுள்ளது.

இதுகுறித்து கூறிய பிஜு, 'இது என் கார் கிடையாது என் நண்பரின் கார். சில வேலைகளுக்காக, ஞாயிற்றுக்கிழமை நான் காரை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றேன். அப்போது கொண்டு வரும்போது எங்கள் வீட்டில் பார்க்கிங் வசதி இல்லாததால் அருகே இருந்த குறுகிய மேடையில் பார்க் செய்தேன். அப்போது தான் என் மனைவி அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். நான் பல ஆண்டுகளாக பேருந்துகளை ஓட்டுகிறேன். எனவே இன்னோவாவின் நீளம் எனக்கு ஒருபோதும் பிரச்சினையாக இருந்ததில்லை' என பிஜு ஒரு உள்ளூர் சேனலிடம் கூறியுள்ளார்.

 

Tags : #CAR #KERALA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala person parking car gracefull viral video social media | India News.