'அப்பா இறந்துட்டாரு...' 'வீடு FLOOD-ல போய்டுச்சு..' 'லம்போர்கினி மேல பைத்தியம்...' 'ஆனா அவ்ளோ காசு இல்ல...' - இளைஞர் செய்த 'வேற லெவல்' காரியம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jan 18, 2021 03:59 PM

கையில் கிடைத்த பழைய பொருட்களை கொண்டு கேரள இளைஞர் ஒருவர் 2 லட்சம் ரூபாய் செலவில் லம்போர்கினி போன்ற தோற்றமுள்ள ஒரு கார் தயாரித்துள்ளார்.

kerala youth rebuild old car items like Lamborghini 2 lakh

ஒரு லம்போர்கினி காரின் விலை சுமார் ரூ.3.5 கோடி ரூபாய் ஆகும். இடுக்கி மாவட்டம் சேனாபதி குலகொழிச்சல் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அனாஸ் பேபிக்கு சிறு வயது முதலே கார்கள் என்றால் கொள்ளை பிரியம். இவர் மங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், லம்போர்கினி கார் தயாரிக்க வேண்டும் என வேலையை விட்டு விட்டு சொந்த ஊர் வந்து விட்டார்.

இந்த நிலையில், 2018-ம் ஆண்டு கேரளாவின் பெரு வெள்ளத்தில் அனாஸ் பேபியின் வீடு முற்றிலும் இடிந்து விட்டது. அவரது அப்பாவும் இறந்து போனார். இதனால், குடும்பத்தின் பாரம் அனாஸின் மேல் விழுந்தது. இருந்தபோதிலும், தன் லம்போர்கினி கனவில் இருந்து அனாஸ் பின்வாங்கவில்லை. அனாஸின் கார்கள் மீதான பைத்தியத்துக்கு   அம்மாவும் சகோதரரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'ஒழுங்கா வேலைக்கு போய் உருப்படப் பார்' என்று அறிவுரையும் கூறி வந்தனர். ஆனாலும் அனாஸ் பின்வாங்கி விடவில்லை.

இதன்பின்னர், யூடியூப்பில் லம்போர்கினி தயாரிக்கும் முறையையும் பார்த்து தொழில்நுட்பத்தையும் தெரிந்து கொண்டார். முதலில் லம்போர்கினி காரைப் போன்றே முதலில் பேப்பரில் மாடலாக செய்து பார்த்தார்.

பிறகு, பாலக்காடு, திருச்சூர், மங்களூர் போன்ற நகரங்களுக்கு சென்று பழைய கார் உதிரி பாகங்களை சேகரிக்க தொடங்கினார். 110 சிசி. பைன் இன்ஜீன் ஒன்று அவருக்கு கிடைத்ததும் , தன் லம்போர்கினி தயாரிப்பில் தீவிரமாக இறங்கினார். பழைய இரும்பு, பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தி அனாஸின் லம்போகினி தயாராக தொடங்கியது. சுமார் ஒன்றரை ஆண்டு கால உழைப்பில் லம்போர்கினியே உருவாகி விட்டது.

ஒரிஜினில் உள்ளது போலவே மேல் நோக்கி திறக்கும் கதவு, காக்பிட் கேபின், பின்பக்க இன்ஜீன், டிஸ்க் பிரேக், பவர் விண்டோ, சன் ரூஃப், காரின் முன்பக்க பின்பக்கங்களில் கேமராக்களுடன் இந்த லம்போர்கினி கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காரை தயாரிக்க ரூ. 2 லட்சம்தான் செலவாகியுள்ளது. இது உண்மையான லம்போர்கினியின் விலையோடு ஒப்பிடுகையில் யானைக்கும் கொசுவிற்கும் உள்ள வேறுபாடு உள்ளது.

அனாஸ் தான் தயாரித்த லம்போர்கினி புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட அது வைரலானது. இதைகண்ட பெங்களூருவில் உள்ள லம்போர்கினி ஷோரூம் ஒன்று அனாஸின் உழைப்பை வாழ்த்தி பாராட்டு கடிதமும் அனுப்பியுள்ளது. தற்போது, இந்த காருக்கு மேலும் ரூ. 50,000 செலவழித்து எலக்ட்ரிக் காராக மாற்ற முடிவு செய்துள்ளாராம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala youth rebuild old car items like Lamborghini 2 lakh | India News.