“பாய் ஃப்ரண்ட் இல்லாத ‘சிங்கிள்’ மாணவிகளுக்கு காலேஜ்க்குள்ள வர அனுமதி இல்ல!” - ‘பேராசிரியர்’ கையெழுத்துடன் ‘கல்லூரியை’ அதிரவைத்த ‘வைரல்’ நோட்டீஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sivasankar K | Jan 27, 2021 07:55 PM

ஆக்ராவில் இயங்கி வரும் பிரபல கல்லூரி ஒன்றில் பிப்ரவரி 14ம் தேதிக்குள் மாணவிகளின் பாதுகாப்பு கருதி மாணவிகள் பாய் ஃபிரண்ட் இல்லாவிடில் கல்லூரிக்கு வரவேண்டாம் என்று விசித்திர நோட்டீஸ் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Single girls without Boyfriend Not allowed college Viral Fake Notice

ஆக்ராவில் உள்ள அந்த பிரபல கல்லூரியின் பெயரில் வெளியான இந்த நோட்டீசில் அந்த கல்லூரியின் லோகோ பதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த கல்லூரியின் லெட்டர் பேடில் பேராசிரியர் ஆஷிஷ் சர்மா என்கிற பெயரில் கையெழுத்திடப்பட்ட நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த நோட்டீசில் தான் பிப்ரவரி 14 ஆம் தேதிக்குள் ஒவ்வொரு மாணவிக்கும் குறைந்தது ஒரு பாய் ஃபிரண்டாவது இருக்கவேண்டும். மாணவியின் பாதுகாப்பு கருதி பாய் ஃபிரண்டுடன் மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய வேண்டும்.

சிங்கிளாக வரும் மாணவிக்கு கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை. மாணவிகள் தங்கள் பாய்ஃபிரண்டுடனான சமீபத்திய புகைப்படத்தையும் காண்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அன்பை பகிருங்கள் என்று அந்த நோட்டீஸ் முடிவு பெறுகிறது.  வாட்ஸ் அப்பில் பரவி பெரும் சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த நோட்டீஸ். கல்லூரி மாணவிகளிடையே பெரும் சலசலப்பை உண்டாக்கிய இந்த நோட்டீஸ் பற்றி சில மாணவிகள் பெற்றோரிடம் கூற தயங்கியதாகவும் கூறப்படுகிறது.

எனினும் சில மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தைரியமாக இதுபற்றி தெரிவித்ததை அடுத்து அவர்கள் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்துக்கு இந்த விஷயத்தை கொண்டுசென்றனர். இந்த விஷயம் தெரியவந்ததை அடுத்து கல்லூரி பிரின்சிபால் எஸ்.பி.சிங் அதிர்ந்துள்ளார். இதுபற்றி அவர் விளக்கம் அளித்திருக்கிறார். அந்த விளக்கத்தின்படி கல்லூரி நிர்வாகத்தின் பெயரை சீர்குலைக்க சிலர் இந்த சதி வேலையை செய்திருப்பதாகவும், மாணவிகளும் பெற்றோர்களும் இந்த நோட்டீசை புறக்கணிக்குமாறும் கூறியிருக்கிறார்.

ALSO READ:-  “7 மாசமா வெயிட் பண்ணிட்டோம்!.. இப்ப வேற வழி இல்ல”.. ‘டிக்டாக்’ செயலியின் நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய பரபரப்பு மெயில்!

மேலும் இந்த செயலை யார் செய்தது என கல்லூரி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றும், அந்த நோட்டீஸில் இருக்கும் ஆஷிஷ் சர்மா என்கிற பெயரில் எந்த பேராசிரியரும் கல்லூரியில் பணிபுரியவில்லை என்றும், இது கடைசி வருட மாணவர்களின் வேலையாக இருக்கலாம் என சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Single girls without Boyfriend Not allowed college Viral Fake Notice | India News.