என்னங்க சொல்றீங்க..? ஒரு சிப்ஸ் இவ்வளவு லட்சமா?.. விலையை கேட்டாலே கண்ணைக் கட்டுதே.!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரபல ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் ஒன்றில் ஒரு சிப்ஸ்-ன் விலை 5000 அமெரிக்க டாலர்கள் என குறிப்பிடப்பட்டிருப்பது பலரையும் அதிர வைத்துள்ளது.
Also Read | புயலால் கொந்தளிச்ச கடல்.. கொஞ்ச நேரத்துல கரையொதுங்கிய தங்க நிற தேர்.. ஆந்திராவில் பரபரப்பு..வைரல் வீடியோ..!
நம்மில் பெரும்பாலானோருக்கு காரசாரமாகவும் கிரிஸ்பியாகவும் இருக்கும் சிப்ஸ் மீது ஒரு காதல் உண்டு. அடைமழை காலமோ, கிரிக்கெட் திருவிழாவோ, சினிமா தியேட்டர்களோ சிப்ஸ் இல்லாமல் பலரது ஆசைகள் முடிவுக்கு வருவதில்லை. அப்படி, பலரின் வாழ்வோடு ஐக்கியமாகிவிட்ட இந்த சிப்ஸ் விலை மலிவானவை என்பதும் இதன் சிறப்பம்சங்களுள் ஒன்று. ஆனால், பிரபல ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் ஒன்றில் ஒரு பாக்கெட் பிரிங்கிள்ஸ் சிப்ஸ்-ன் விலை 5000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 3.86 லட்ச ரூபாய்) என குறிப்பிடப்பட்டிருப்பது பலரையும் ஷாக்-ஆக வைத்திருக்கிறது.
5000 டாலர் சிப்ஸ்
இந்த இணையதளத்தில் 'அரிதான மடிக்கப்பட்ட பிரிங்கிள்ஸ் சிப்ஸ்' (RARE folded pringles chips) என்று குறிப்பிடப்பட்டுள்ள இந்த சிப்ஸ்-க்கு எதற்கு இத்தனை மவுசு என்பது தெரியவில்லை. சிப்ஸ்-ன் ஒரு பகுதி மடிந்தாற்போல காணப்படுவதன் காரணமாக இதனை அரிதானது எனக் குறிப்பிட்டுள்ளார் இந்த சிப்ஸ் விற்பனையாளர்.
அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியை சேர்ந்த இந்த விற்பனையாளர், இந்த சிப்ஸை இந்தியாவுக்கு அனுப்புவதில் சிரமம் இருப்பதாகவும் இணைத்தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இது புதிதல்ல
சிப்ஸ்களை இந்த விலையில் இணையதளங்களில் விற்பது, இது புதிதல்ல. சமீபத்தில் இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷையரின் ஹை வைகோம்பைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவர், "அரியவகை மடிக்கப்பட்ட சிப்ஸ்" என குறிப்பிட்டு 2000 யூரோக்களுக்கு (இந்திய மதிப்பில் 1.6 லட்ச ரூபாய்) விற்பனை செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.
இப்படி பல்வேறு விலைகளில் சிப்ஸ்கள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் விற்கப்படுவது உலகம் முழுவதும் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால், இதே தளத்தில் சரியான விலைக்கும் இதே தரத்திலான சிப்ஸ்களை பலரும் விற்பனை செய்து வருகிறார்கள். வித்தியாசமாக ஏதாவது செய்து கவனத்தினை ஈர்க்கும் விதமாக சிலர் இப்படியான செயல்களில் ஈடுபடுவதாக நெட்டிசன்கள் தெரிவித்துவருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8