இறந்துட்டார்னு மார்ச்சுவரிக்கு அனுப்பப்பட்ட முதியவர்.. பெட்டியை திறந்த ஊழியருக்கு காத்திருந்த ஷாக்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | May 04, 2022 12:06 PM

சீனாவில் இறந்துவிட்டதாக கருதி பிணவறைக்கு அனுப்பப்பட்ட முதியவர் ஒருவர் உயிருடன் இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்திருப்பது பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

Man Declared Dead At Shanghai Found Alive In Morgue

Also Read | மெக்காவின் அதிசய கிணறு.. 1000 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் மர்மம்.. அறிவியலை மிஞ்சிய ஜம் ஜம் தண்ணீர்..!

கொரோனா

சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் உலகம் முழுவதும் பரவியது. அதன்பிறகு, கொரோனா வைரஸில் ஏற்பட்ட திரிபு காரணமாக ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ், ஒமைக்ரான், ஒமைக்ரான் XE என பல்வேறு வகையில் உருமாறி மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது. துவக்கத்தில் கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகமானதை தொடர்ந்து, பயன்பாட்டிற்கு வந்த கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளின் பலனாக கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் தற்போது பெருமளவு குறைந்திருக்கின்றன.

இருப்பினும் கொரோனா திரிபுகளால் இன்னும் மனித குலம் ஆபத்தை சந்தித்துவருகிறது. சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. கொரோனாவின் புதிய திரிபு சீனாவிலும் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை அந்த நாட்டு அரசு விதித்துள்ளது.

Man Declared Dead At Shanghai Found Alive In Morgue

முதியவர்

இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் மாகாணத்தின் பூட்டோ மாவட்டத்தில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வசித்துவந்த முதியவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை ஜின்சாங்செங் நல மருத்துவமனையின் பிணவறைக்கு கொண்டு சென்றனர் ஊழியர்கள்.

அங்கே, இறந்து போனதாக கருதப்பட்ட முதியவரின் உடலில் அசைவுகள் இருந்ததை கண்ட மருத்துவ ஊழியர்கள் அதிர்ந்துபோயினர். இதைத் தொடர்ந்து மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, விரைந்துவந்த மருத்துவர்கள் முதியவருக்கு இன்னும் இதயத் துடிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Man Declared Dead At Shanghai Found Alive In Morgue

சிகிச்சை

இதனை தொடர்ந்து, முதியவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து உள்ளதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனாவில் மரணமடைந்ததாக கருதப்பட்ட முதியவர், பிணவறையில் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

Tags : #SHANGHAI #MAN #MORGUE #முதியவர் #பிணவறை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man Declared Dead At Shanghai Found Alive In Morgue | World News.