"ஆர்டர் பண்ணது ஸ்விகி'ல.. ஆனா வந்தது என்னவோ DUNZO'ல தான்.." டெலிவரி ஊழியர் போட்ட புது ஐடியா!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்றைய காலகட்டத்தில், வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் மக்கள், பல விஷயங்களை தங்களின் நேரத்திற்கேற்ப ஸ்மார்ட்டாக செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Also Read | ‘என்ன இப்படியெல்லாம் அடிக்குறாரு’.. ஒரே ஷாட்டில் SRH-ஐ மிரள வைத்த டேவிட் வார்னர்..!
முன்பு செய்து வந்த விஷயங்களை தற்போது எவ்வளவு எளிதாக குறைந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்பதைத் தான் பலரும் விரும்புகின்றனர்.
இதன் காரணமாக, நாம் பயன்படுத்தும் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வது, உணவு பொருட்களை ஹோட்டலுக்கு சென்று அருந்தாமல், ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது என பல விஷயங்கள், நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருக்கிறது.
வேற மாதிரி வந்த ஸ்விகி டெலிவரி
அப்படி இருக்கும் சூழ்நிலையில், ஸ்விகி, ஜொமாட்டோ, பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட பல இணைய வர்த்தக நிறுவனங்கள், மக்கள் மத்தியில் அதிகம் புகழ் பெற்று விளங்குகிறது. இந்நிலையில், ஸ்விகியில் காஃபி ஒன்றை ஆர்டர் செய்து விட்டு காத்துக் கொண்டிருந்த நபருக்கு, வேற மாதிரி டெலிவரி வந்து சேர்ந்தது, பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
காஃபி ஆர்டர்..
கடந்த சில தினங்களுக்கு முன், பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர், 'CCD'யில் இருந்து காஃபி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். தொடர்ந்து, அவரது ஆர்டரும் தயாராக, அதை வாங்கிய ஸ்விகி ஊழியர் செய்த காரியம் தான் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. ஆர்டரை வாங்கிய அந்த ஊழியர், Dunzo மூலம் சம்மந்தப்பட்ட நபருக்கு, காஃபியை சேர்க்க வழி செய்துள்ளார்.
ஸ்விகிக்கு பதிலா 'Dunzo'?
Dunzo என்பது ஒரு பொருளை சம்மந்தப்பட்ட நபரிடம் சேர்க்கும் ஆன்லைன் வர்த்தகம் ஆகும். காஃபியை பெற்றுக் கொண்ட ஸ்விகி ஊழியர், பெங்களூர் டிராபிக்கில் சென்று டெலிவரி செய்ய சோம்பேறி கொண்டு, Dunzo உதவியை நாடியுள்ளார். ஸ்விகியில் ஆர்டர் செய்த காஃபி, Dunzo-வில் வந்தது பற்றி தனக்கு நடந்த வேடிக்கையை அந்த நபர் பகிர்ந்துள்ளார்.
5 ஸ்டார் ரேட்டிங் கொடுங்க..
இது தொடர்பான தகவலின் படி, ஸ்விகி ஊழியர் தன்னை அழைத்து, உங்களின் காஃபியை Dunzo மூலம் அனுப்பி உள்ளேன் என்றும், தயவு செய்து எனக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுங்கள் என்றும் தொலைபேசியில் தெரிவித்ததாக உணவு ஆர்டர் செய்த நபர் குறிப்பிட்டுள்ளார் . இது தொடர்பான பதிவுகள் அதிகம் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதே போல, Dunzo-வும், தன்னுடைய கருத்தினை ஸ்விகியை டேக் செய்து ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
