கேரளாவையே குலை நடுங்க வைத்த 'மர்ம' பூஜை.. முக்கிய புள்ளி பத்தி தெரிய வந்த 'உண்மை'.. 3 வருசமா போட்ட 'பகீர்' பிளான்?!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வசித்து வந்த ரோஸ்லின் மற்றும் தருமபுரியை சேர்ந்த பத்மா ஆகியோர், எர்ணாகுளத்தில் லாட்டரி விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதனிடையே, சில மாதங்கள் இடைவெளியில் ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகிய இருவரும் காணாமல் போயுள்ளனர்.
இது பற்றி இருவரின் வீட்டாரும் புகார் கொடுத்திருந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கேரளாவையே நடுங்க வைக்கும் பின்னணி தெரிய வந்தது. ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகிய இருவரின் செல்போன் எண்கள் கொண்டு விசாரித்ததில் கடைசியாக இருவருக்கும் முகம்மது ஷபி என்ற ஒரே நபர் பேசி இருப்பதும் தெரிய வந்தது.
அவரை பிடித்து விசாரித்த போது திருவல்லா பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் பண சிக்கல் தீர சிறப்பு பூஜை செய்ததும் அதில் இரு பெண்களையும் பலி கொடுத்ததும் காவல்துறைக்கு தெரியவந்தது. இதனையடுத்து முகமது ஷபி, பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், கைப்பற்றப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களிலும் சில பகுதிகளில் காயங்கள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனிடையே குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெண்களின் உடல் உறுப்புகளை சாப்பிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் கைதான லைலா, நரமாமிசத்தை சாப்பிட்டதாக காவத்துறையினரிடம் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக முகமது ஷபி, பெண்களின் உறுப்புகளை தம்பதியை சாப்பிட சொல்லியதாகவும் தகவல்கள் வெளியாகி இருப்பது நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்த நிலையில், இது அனைத்துக்கும் மூல காரணமாக இருந்த முகமது ஷாபி, இதற்கு முன்பு ஈடுபட்டு வந்த செயல்கள், இன்னும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வெளியாகி உள்ள தகவலின் படி, முகமது ஷாபி ஒரு சைக்கோ என்றும் தெரிய வந்துள்ளது. ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகிய இருவரின் உடலில் இருந்த காயங்களை போல, 2020 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட 75 வயது மூதாட்டி உடலிலும் இருந்துள்ளது. அவரையும் முகமது ஷாபி தான் கொலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தனக்கு யாரையாவது கொலை செய்ய வேண்டும் என்றால் அதில் சில பேரை கூட்டாளிகளாகவும் சிக்க வைத்துக் கொள்வார் முகமது ஷாபி. அப்படி தான், பகவல் சிங் மற்றும் லைலா தம்பதியை சிக்க வைத்துள்ளார். அவர்களின் பண நெருக்கடிக்கு தீர்வு காணலாம் என போலி பேஸ்புக் சுயவிவரங்கள் மூலம் அவர்கள் இருவரையும் தன் பக்கம் நம்ப வைத்துள்ளார் ஷாபி.
இதற்காக கடந்த 3 ஆண்டுகள் பகவல் சிங் வீட்டிற்கு போய் அவர்களின் முழு நம்பிக்கையையும் பெற்று இந்த கொடூர செயலில் முகமது ஷாபி ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், இவர் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. முகமது ஷாபி குறித்த செய்திகள், தற்போது கடும் பதற்றத்தை உண்டு பண்ணி வருகிறது.