பேட்டிங் பண்ண சொன்னா என்ன பண்ணிட்டு இருக்க.. கொந்தளித்த CSK வீரர்.. கிரவுண்ட்ல நடந்த களேபரம்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Oct 13, 2022 02:10 PM

சையது முஷ்டாக் அலி தொடரில் அம்பத்தி ராயுடு மற்றும் ஷெல்டன் ஜாக்சன் இடையே நடந்த வாக்குவாதம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Ambati Rayudu and Sheldon Jackson Clash on ground

Also Read | கடையை இடிக்கும்போது கண்டுபிடிக்கப்பட்ட குழி.. தோண்டி பார்த்துட்டு உறைஞ்சு போன ஊழியர்கள். இதுக்கு மேலயா இவ்ளோ வருஷம் கடை இருந்துச்சு..!

சையது முஷ்டாக் அலி தொடர்

பிரபல உள்ளூர் T20 போட்டியான சையது முஷ்டாக் அலி தொடர் இந்தியாவில் சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் க்ரூப் D ஆட்டத்தில் பரோடா மற்றும் செளராஷ்டிரா அணிகள் விளையாடின. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று இந்த போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மிதேஷ் படேல் 35 பந்துகளில் 65 ரங்களும், விஷ்ணு சோலங்கி 33 பந்துகளில் 51 ரங்களும் குவித்தனர். பரோடா அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரருமான அம்பத்தி ராயுடு டக்கில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

Ambati Rayudu and Sheldon Jackson Clash on ground

அதன் பின்னர் களமிறங்கிய ஜெயதேவ் உனட்கட் தலைமையிலான செளராஷ்டிரா அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து வெற்றபெற்றது. செளராஷ்டிரா அணியை சேர்ந்த சமர்த் வியாஸ் 97 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.

வாக்குவாதம்

இந்த போட்டியில் செளராஷ்டிரா அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த வேளையில், அம்பத்தி ராயுடு மற்றும் ஷெல்டன் ஜாக்சன் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போட்டியில் 9 வது ஓவர் வீசப்பட்ட போது, ஜாக்சன் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்தார். அப்போது அவரது உடல்மொழிகள் ராயுடுவை சீண்ட, பேட்டிங் செய்ய தாமதிப்பதாக கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ராயுடு. இதனிடையே அவர் ஜாக்சனை நோக்கி நடந்துவர அணி வீரர்கள் இருவருக்கும் இடையே சென்று சமாதனம் செய்தனர்.

Ambati Rayudu and Sheldon Jackson Clash on ground

ஒருபக்கம் ஜாக்சான் தொடர்ந்து வாக்குவாதம் செய்ய நடுவர்கள் இருவரையும் விலக்கி வைத்தனர். சற்று நேர சலசலப்புக்கு பிறகு மீண்டும் போட்டி துவங்கியது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | வித்தியாசமா நடந்துக்கிட்ட பயணி.. செக் பண்ணதும் அதிர்ந்த அதிகாரிகள்.. ஏர்போர்ட்டில் பரபரப்பு..!

Tags : #AMBATI RAYUDU #SHELDON JACKSON #CLASH #CRICKET GROUND #SYED MUSHTAQ ALI TROPHY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ambati Rayudu and Sheldon Jackson Clash on ground | Sports News.