"மகாஜனங்களே... இப்டி ஒரு சம்பவத்த எந்த 'மேட்ச்'லயும் பாத்திருக்க மாட்டீங்க... ஐயோ அந்த பந்து படுற பாடு இருக்கே..." வேற லெவல் ஃபன் VIDEO!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று, தற்போது நெட்டிசன்களிடையே வேற லெவலில் வைரலாகியுள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரரான மைக்கேல் வாகன், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் குறித்து அதிக கருத்துக்களை தனது சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில், நடந்து முடிந்த இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் பிட்ச் குறித்து வாகன் தெரிவித்திருந்த கருத்து, அதிகம் பரபரப்பை கிளப்பியிருந்தது.
இந்நிலையில், ஐரோப்பிய உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் நடந்த வீடியோ ஒன்றை பகிர்ந்த மைக்கேல் வாகன், 'இது தான் முறையான கிரிக்கெட்' என்ற கேப்ஷனை குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில், பேட்ஸ்மேன் அடித்த பந்து கீப்பர் கைக்கு சென்ற நிலையில், அவர் அந்த பந்தைத் தவற விட்டார். தொடர்ந்து, ரன் அவுட் செய்ய வேண்டி, பந்தினை வேகமாக அவர் ஸ்டம்பை நோக்கி வீசினார்.
Now this is proper cricket !!! pic.twitter.com/bhJ6rDLVAd
— Michael Vaughan (@MichaelVaughan) March 10, 2021
அது ஸ்டம்பில் படாமல், ஃபீல்டர் கையிலிருந்தும் தவறிச் செல்ல, பேட்ஸ்மேன்கள் மீண்டும் வேகமாக ரன் ஓடினர். தொடர்ந்து, பவுலர் பந்தினை எடுத்து ரன் அவுட் செய்ய அழகிய வாய்ப்பு இருந்தும், அதனை மீண்டும் தவற விட, பேட்ஸ்மேன்கள் மீண்டும் ரன்களை ஓடினர். பந்து வீசும் அணியினரின் வேடிக்கையான தவறால் எதிரணி 4 ரன்கள் வரை ஓடியே எடுத்தது.
ஒரு ரன்னில் முடிய வேண்டியதை, நான்கு ரன்கள் வரை கொண்டு சென்ற ஃபீல்டர்களின் தவறை நெட்டிசன்கள் வேற லெவலில் கலாய்த்து வருகின்றனர். அதே போல, பலரும் பல விதமான கருத்துக்களையும் வீடியோவிற்கு தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
