
VIDEO: நம்ம 'தல' தோனியா 'இப்படி' கோவப்படுறாரு...? 'ஸ்டெம்ப் மைக்கில் பதிவான வார்த்தை...' 'என்ன சொல்லியிருக்காரு தெரியுமா...? - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று (19-04-2021) நடைபெற்ற போட்டியில் தோனி இளம் வீரர்களை திட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மும்பையில் நேற்று ராஜஸ்தான் அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் சிஎஸ்கே அணியின் புதிய வரலாற்றையே படைத்துள்ளது என பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
அதோடு சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்ய இறங்கியதால் வெல்வதி கடினம் என நினைத்தாலும், அடித்து ஆடி ரன்னை உயர்த்தி ஆட்டத்தை கடினப்படுத்தியது.
20 ஓவரில் 188 ரன்கள் எடுத்த நிலையில், ராஜஸ்தான் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை தொடங்கியது. மேலும், சிஎஸ்கே வீசிய முதல் 10 பவுலர்களில் ராஜஸ்தான் அதிக ரன்கள் எடுக்க காரணமாக அமைந்தது.
கேப்டன் கூல் என அழைக்கப்படும் தல தோனியே நேற்று கண்டபடி திட்டியுள்ளார். அவர் இந்தியில் பேசிய ஆடியோ மற்றும் அதன் வீடியோ தற்போது சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதற்கு காரணம், நேற்று பீல்டிங் நிற்க வைக்கும் போது தீப் பைன் லெக் திசையில் யாரும் இல்லை. ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் ரன்கள் அதிகமாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பீல்டிங்கிலும் தீப் பைன் லெக்கில் ஆளில்லாததை பார்த்து கடுப்பாகியுள்ளார்.
அப்போது ஸ்டெம்ப் மைக்கில், 'அங்க இருந்த ஆள் எங்கே...? ஏன் அந்த இடத்துல மட்டும் எப்போவுமே ஒருத்தர் மிஸ் ஆகிக்கொண்டே இருக்கிறார், அங்கே போய் ஒருவர் நில்லுங்கள்' என தோனி கோபமாக கத்தினார். அதுமட்டுமில்லாமல் கடுப்பில் 'அங்கு ஒருத்தனை காணோம்' என இந்தியில் கூறியுள்ளார்.
#CSKvRR #Dhoni best thing on internet. Dhoni on stump mic #jadeja pic.twitter.com/UYBR3pyuk8
— Amritansh Tiwari (@Amritansh777) April 19, 2021

மற்ற செய்திகள்
