'போட்டியை ரசித்துக் கொண்டிருந்தபோதே'... 'தவறி விழுந்த 13 வயது சிறுமி'... ‘அதிர்ந்த ரசிகர்கள்’... வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Sep 03, 2019 12:33 PM

கால்பந்துப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த 13 வயது சிறுமி, மைதானத்தில் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A soccer fan has survived fall from the top tier of a stadium

பிரேசில் நாட்டில் சௌ பாலோ நகரில் மொரும்பி ஸ்டேடியம் என்ற விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சௌ பாலோ மற்றும் கிரீமியோ அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. ரசிகர்கள் கால்பந்து வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். பரபரப்பான கட்டத்தில், மைதானத்தின் 2-வது தளத்தின் தடுப்புக்கு அருகில், 13 வயது சிறுமி ஒருவர் உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தார். 

அப்போது யாரும் எதிர்பாரதவிதமாக அந்த சிறுமி திடீரென கால் இடறி, சுமார் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதனால் கீழ்தளத்தில் இருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ரசிகர்கள், அந்த சிறுமியை ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை நடைப்பெற்று வருகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SOCCER #FOOTBALL #BRAZIL #FAN #HORRIFYING