"150 ரூபா செலவு'ல 300 KM வரை போகலாம்".. விவசாயி மகன் உருவாக்கிய அற்புதமான கார்!!.. "வேற லெவல்'ங்க இது"
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்பொதுவாக, இன்று கார், பைக் உள்ளிட்ட ஆட்டோ மொபைல்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

மேலும், கார், பைக் என எதை வாங்கினாலும் அந்த வாகனம் குறித்து முழு விவரத்தையும் தெரிந்து விட்டு தான், தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்வார்கள்.
அதே போல, மிக முக்கிய அம்சமாக ஒரு வாகனத்தின் மைலேஜூம் பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, பல லட்சம் கொடுத்து நாம் வாங்கும் கார் மூலம் பல கிலோ மீட்டர்கள் பயணம் மேற்கொள்ளலாம் என்பதால், அதிக மைலேஜ் தரக் கூடிய கார்களுக்கு அதிக மவுசும் உள்ளது.
அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த விவசாயி மகன் ஒருவர் உருவாக்கி வரும் கார், 150 ரூபாய்க்கு 300 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கும் விஷயம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மகாராஷ்ட்ர மாநிலம், யவத்மல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹர்ஷல் நக்ஷன். இவரது தந்தை ஒரு விவசாயி ஆவார்.
இதனிடையே, தனது வீட்டில் வைத்து கார் ஒன்றை உருவாக்கி வருகிறார் ஹர்ஷல். எம் டெக் பட்டதாரியான இவர், தனது நண்பர் ஒருவர் உதவியுடன் இந்த காரை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் இல்லாமல் ஹைட்ரஜன் கொண்டு இயங்கும் வகையில் இந்த காரை அவர் உருவாக்கி வருகிறார். 150 ரூபாய் செலவில் ஹைட்ரஜனை நாம் நிரப்பினால், சுமார் 300 கி. மீ வரை இந்த காரில் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், இதுவரை 25 லட்ச ரூபாய் இந்த காருக்காக செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் இந்த காரின் உருவாக்க பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இருப்பினும் இந்த காரின் பயன்கள் குறித்த தகவல் அதிகம் வைரலாகி வருகின்றன. இதனை ஆட்டோமேட்டிக்காக இயங்க வைக்கும் வகையிலும் ஹர்ஷல் உருவாக்கி வருவதால் அதிக செலவு ஆகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தவிர இன்னும் நிறைய வசதிகளும் இந்த காரில் இடம்பெற்றுள்ளது.
உரிய அனுமதி வாங்கி விரைவில் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்திலும் ஹர்ஷல் இருப்பதாக கூறப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில், 150 ரூபாய்க்கு 300 கி. மீ வரை செல்ல கூடிய கார் என்றால் நிச்சயம் பலருக்கும் பிரம்மிப்பை தான் ஏற்படுத்தும். இதனால், ஹர்ஷல் தயாரித்த காரையும் பலர் எதிர்நோக்கி காத்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்
