திருமணம் ஆகி 8 மாதத்தில் அரங்கேறிய கொடூரம்.!.. "எவ்ளோ நாள் தான் தாங்குறது" - இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணமான 8 மாதங்களில், இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

உத்திர பிரதேச மாநிலம், அலிகார் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி. இவருக்கும், டெல்லியை சேர்ந்த அனுபம் என்பவருக்கும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்காக பல லட்சம் ரூபாய் அனுபமிற்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து கணவருடன் டெல்லி பகுதியில் குடியேறி உள்ளார் ஆர்த்தி. இதனிடையே, சமீபத்தில் தனது சொந்த ஊருக்கு சென்றிருந்த ஆர்த்தி, பத்து லட்ச ரூபாய் பணமும், கார் ஒன்றை வாங்கித் தருமாறும் கேட்டு தனது கணவர் அனுபம் தன்னை துன்புறுத்துவதாக வேதனையுடன் தனது சகோதரி மற்றும் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.
கல்யாணத்துக்கான கடனையே தனது தந்தை இன்னும் முற்றிலுமாக அடைத்து முடிக்காத நிலையில் மீண்டும் கணவர் இப்படி கேட்பது ஆர்த்தியை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது. இதன் காரணமாக மீண்டும் கணவருடன் வாழ வேண்டாம் என்றும் குடும்பத்தினர் கூறி உள்ளனர். ஆனால், அதனை கேட்காமல் மீண்டும் டெல்லி சென்ற ஆர்த்தி, கணவரது கொடுமையை மீண்டும் தாங்கிக் கொண்டு வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்படி இருக்கையில், கணவர் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படும் நிலையில், போலீஸ் நிலையத்தை நாடி உள்ளார் ஆர்த்தி. தனது மொபைல் எண்ணை கணவர் பிளாக் செய்து விட்டதாகவும், அவர் எங்கே என்பதை கண்டுபிடித்து தருமாறும் கோரி உள்ளார். அப்போது, அனுபமிற்கு போலீசார் அழைத்து விசாரித்த போது, மனைவியுடன் வாழ விருப்பமில்லை என அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதன் காரணமாக தன்னை வரதட்சணை கொடுமை செய்யும் கணவர் மீது புகார் அளிக்கவும் போலீசார் கூறியுள்ளனர். ஆனாலும் தனது கணவர் மீது எந்தவித புகாரை கொடுக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளார் ஆர்த்தி. தொடர்ந்து, மீண்டும் ஆர்த்தியை அவரது வீட்டிற்கு கொண்டு போலீசார் சேர்த்துள்ளனர்.
இதனிடையே, சம்பவம் முடிந்த அடுத்த நாள் மதியம், விபரீத முடிவை எடுத்து ஆர்த்தி உயிரிழந்து விட்டதாக போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது. இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆர்த்தி மொபைல் போனை போலீசார் எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் சுமார் 30 முதல் 40 வினாடிகள் ஓடக்கூடிய ஆடியோ ஒன்றில் தனது வாழ்க்கை முடிந்து விட்டது என்றும் கணவர் கொடுமைப்படுத்தியது தொடர்பாகவும் சில கருத்துக்களை ஆரத்தி குறிப்பிட்டுள்ளார்.
இதன் பெயரில் மனைவி விபரீத முடிவை எடுக்க தூண்டியதன் பெயரில், அவரது கணவர் அனுபமை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறம் ஆர்த்தியின் குடும்பத்தினர், அவரது மறைவில் மர்மம் இருப்பதாகவும் தீவிரமாக இதனை விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்
