அதிர்ச்சி கொடுத்த கோவை 'என்ஜினியர்'... ஷாக்கிங் 'ஆடியோ'வால் போலீஸ்க்கு சென்ற சரத்குமார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இதனால் அதிர்ந்து போன சரத்குமார் தற்போது போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சென்னை போலீஸ்க்கு ஆன்லைனில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், ''என்னுடைய செல்போன் நம்பரிலிருந்து, என்னுடைய குரலில் நான் பேசுவதுபோல போன் கால்கள் சென்றதாக எனக்குத் தகவல் வந்தது. ஆனால், நான் யாருக்கும் போன் செய்யவில்லை. இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என தெரிவித்து இருக்கிறார். கடந்த சில நாட்களாக சரத்குமார் பேசுவது போல அவரது கட்சி நிர்வாகிகள் சிலருக்கு கால் போய் இருக்கிறது.
குரல் ஒரே மாதிரியாக இருந்ததால் யாருக்கும் சந்தேகம் எழவில்லை. ஆனால் இதுகுறித்து சரத்குமாரிடம் கேட்டபோது நான் யாருக்கும் போன் செய்யவில்லை என தெரிவித்து இருக்கிறார். உச்சகட்டமாக அதிகாலை நேரத்தில் விஐபி ஒருவர் போன் செய்துள்ளார். பதிலுக்கு சரத்குமார் பேசியபோது நீங்கள் எனக்கு கால் செய்ததால் தான் நான் உங்களை அழைத்தேன் என தெரிவிக்க, ஷாக் ஆன சரத்குமார் தன்னுடைய மொபைல் நம்பரில் இருந்தே தனது குரல் போலவே மொபைல் அழைப்புகள் பலருக்கும் போய் இருப்பதை தெரிந்து கொண்டார்.
இதையடுத்து சரத்குமார் போலீசில் புகாரளிக்க தற்போது சைபர்கிரைம் போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் தன்னுடைய குரலில் பேசும் அந்த நபருடன் சரத்குமார் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி இருக்கிறது. அதில் தான் கோவையில் இருப்பதாகவும் என்ஜினியராக வேலை பார்த்ததாகவும், இதற்கென ஒரு ஆப்ஸ் இருக்கிறது. அதை டவுன்லோடு செய்தால் அதுபோல பேசலாம்,'' என்றும் தெரிவித்து இருக்கிறார். இதனால் சரத்குமார் தன்னுடைய சிம்கார்டை மாற்றிவிட்டு வேறு சிம்கார்டை பயன்படுத்தி வருகிறார்.