"என் '40' வருஷ 'சர்வீஸ்'ல இப்படி பாத்ததே இல்ல",,.. வயத்து வலின்னு 'ஹாஸ்பிடல்' வந்த 'பொண்ணு',,.. மொத்தமா 7 கிலோ 'சைஸ்'ல... அரண்டு போன 'மருத்துவர்'கள்!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜார்கண்ட் மாநிலம், போகரோ (Bokaro) மாவட்டத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் 17 வயது இளம்பெண் ஒருவர் வயற்று வலியின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஆறு மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிட்சையின் முடிவில் அந்த பெண்ணின் வயற்றில் இருந்து சுமார் 7 கிலோ முடி அகற்றப்பட்டது. பல ஆண்டுகளாக, அந்த பெண்ணிற்கு முடி உண்ணும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, அவை அனைத்தும் வயிற்றிற்குள் சேர்ந்து மொத்தம் 7 கிலோ பந்து உருண்டை போல வயற்றில் உருவாகியுள்ளது.
தனது 40 ஆண்டுகால மருத்துவ பணியில், ஒரு நோயாளியின் வயற்றில் இப்படி ஒரு பெரும் குவியலை பார்த்ததில்லை என அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அந்த இளம் பெண்ணின் வயற்றில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் கருதினர். ஆனால், பின்பு தான் சிறுவயது முதலே தலை முடியை உண்ணும் பழக்கம் இருந்ததால் உருவான முடியின் உருண்டை அது என தெரிய வந்தது.
அறுவை சிகிச்சை முடிந்த பின், இளம்பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரப்யுன்செல் குறைபாடு (Rapunzel Syndrome) அந்த இளம் பெண்ணிற்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதாவது நீண்ட காலத்திற்கு முடியை உட்கொள்வதன் மூலம் ஏற்படும் குறைபாடு ஆகும்.