'எங்கள் இதயமே நொறுங்கி போனது'... 'இந்தியாவுக்கு என்ன ஆச்சு'?... உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலக அளவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தற்போது ஒருநாள் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பால் மிகக்கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு ஆதரவுக்கரம் நீட்ட உலக நாடுகளும் முன்வந்துள்ளன. இதற்கிடையே இந்தியாவில் நிலவும் கொரோனா பாதிப்பு மிகுந்த வேதனை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் கூறியதாவது, ''இந்தியாவில் நிலவும் சூழல் மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. இந்தியாவில் நிலவும் கொரோனா பாதிப்பு இதயத்தை நொறுக்குகிறது''. எனத் தனது வேதனையைப் பதிவு செய்தார். மேலும் முக்கிய கருவிகள் வழங்குதல் உள்பட உலக சுகாதார அமைப்பால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்வோம். நமது பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கைவிடக் கூடாது. அதைக் கைவிட்டால் பல நாடுகளில் தொற்று பாதிப்பு அதிகரித்துவிடும்'' என டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.